என் மலர்tooltip icon

    இந்தியா

    நேஷனல் ஹெரால்டு: ரூ.142 கோடி ஆதாயம் அடைந்த சோனியா, ராகுல் - அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்
    X

    நேஷனல் ஹெரால்டு: ரூ.142 கோடி ஆதாயம் அடைந்த சோனியா, ராகுல் - அமலாக்கத்துறை அதிர்ச்சி தகவல்

    • அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
    • இந்த வழக்கில் அமலாக்கத்துறை ரூ.751.9 கோடி சொத்துகளை முடக்கியது.

    நாட்டின் முதல் பிரதமா் நேருவால் சுதந்திரத்திற்கு முன்பு நிறுவப்பட்ட பத்தி ரிகை நேஷனல் ஹெரால்டு ஆகும். இந்த பத்திரிகையை மேம்படுத்த காங்கிரஸ் கட்சி ரூ.90 கோடி வட்டியில்லா கடன் வழங்கியது.

    அந்த கடனை திருப்பி செலுத்த முடியாததால் அதன் பதிப்பு நிறுவனமான அசோசியேட்டட் ஜர்னல்ஸ் நிறுவனத்தை காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி யும், அவரது மகன் ராகுல் காந்தியும் இயக்குனர்களாக கொண்ட 'யங் இந்தியா' நிறுவனம் கையகப்படுத்தி யது.இதன் மூலம் அசோசி யேட்டட் நிறுவனத்தின் ரூ.2 ஆயிரம் கோடி சொத்துக் களை யங் இந்தியா அபகரித்து விட்டதாக சுப்பிர மணியசாமி வழக்கு தொடர்ந்தார்.

    இது தொடர்பான சட்ட விரோத பண பரிமாற்றம் குறித்து அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது. இது தொடர்பாக சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோரிடம் அம லாக்கத்துறை அதிகாரிகள் விசாரணை நடத்தி இருந்தனர். இந்த வழக்கில் குற்றப் பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. அதில் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோர் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப் பட்டுள்ளனர்.

    மேலும் இருவருக்கும் சமீபத்தில் நோட் டீஸ் அனுப்ப உத்தரவிட்டது. இந்த நிலையில் நேஷனல் ஹெரால்டு முறைகேடு தொடர்பாக பணபரிவர்த்தனை வழக்கு டெல்லி ரோஸ் அவென்யூ கோர்ட்டில் நீதிபதி விஷால் கோக்னே முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.

    இந்நிலையில் நேஷனல் ஹெரால்ட் வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தியின் விசாரணையை ஒத்திவைக்க வேண்டும் என்ற கோரிக்கையை டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் நிராகரித்தது.

    மேலும் இன்றே முதற்கட்ட வாதங்களை இன்றே தொடங்கலாம் என அமலாக்கத்துறைக்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியது. இதைத்தொடர்ந்து நடந்த வாதத்தில் அமலாக்கத்துறை தரப்பு கூறியதாவது, நேஷனல் ஹெரால்டு வழக்கில் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகியோர் மோசடி செய்திருப்பதற்கான முகாந்திரம் உள்ளது.

    இந்த வழக்கில் அமலாக்கத்துறை ரூ.751.9 கோடி சொத்துகளை முடக்கம் செய்வதற்கு முன்பு சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி ஆகியோர் ரூ.142 கோடி பலனடைந்துள்ளனர்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அமலாத்துறையின் இந்த வாதத்தால் இருவருக்கும் சிக்கல் ஏற்பட்டுள்ளது.

    Next Story
    ×