என் மலர்
இந்தியா

முக்கோண காதலில் தாய், மகள்.. திருமணமான ஒரே மாதத்தில் கொலையான அப்பாவி கணவன் - திடுக் பின்னணி!
- கணவரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பைக்கில் ஜிபிஎஸ் சாதனத்தைப் பொருத்தியிருந்தார்.
- ஐஸ்வர்யாவும் ராவும் 2,000 தொலைபேசி அழைப்புகளைச் செய்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர்.
மேகாலயாவில் நடந்த தேனிலவு கொலையை போல தெலுங்கானாவில் திருமணமான ஒரு மாதத்திற்குள் இளைஞர் ஒருவர் கொலை செய்யப்பட்ட வழக்கில் திடுக்கிடும் உண்மைகள் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.
இந்தக் கொலைக்குப் பின்னணியில் இளைஞரின் மனைவி மற்றும் காதலர் இருப்பது காவல்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இறந்தவர் தெலுங்கானா மாநிலம் கர்வால் பகுதியைச் சேர்ந்த தேஜேஷ்வர் என அடையாளம் காணப்பட்டார். அவருக்கு ஐஸ்வர்யா என்ற பெண்ணுடன் மே 18 ஆம் தேதி திருமணம் நடந்தது.ஆனால் ஐஸ்வர்யா திருமால் ராவ் என்பவருடன் உறவில் இருந்துள்ளார்.
முக்கிய திருப்பமாக ஐஸ்வர்யாவின் அம்மா சுஜாதாவும் திருமால் ராவ்வுடன் காதல் கொண்டிருந்தார். ராவ் நடத்தும் தனியார் நிதி நிறுவனத்தில் சுஜாதா துப்புரவுப் பணியாளராக இருந்தார். இருவரும் அங்கு சந்தித்தனர்.
பின்னர், சுஜாதாவின் மகள் ஐஸ்வர்யாவை ராவ் காதலித்தார். ஆனால் ராவ் 2019 இல் வேறொரு பெண்ணை மணந்தார். ராவ் தனது மனைவியைக் கொல்லவும் முயன்றதாக கூறப்படுகிறது. ராவ் உடனான தனது உறவு பற்றி அறிந்ததும், சுஜாதா ஐஸ்வர்யாவை தன்னை விட்டு வெளியேறி தேஜேஸ்வரை திருமணம் செய்து கொள்ளும்படி கட்டாயப்படுத்தினார்.
ஆனால் ஐஸ்வர்யா அதற்குத் தயாராக இல்லை. சுஜாதா வரன் பார்த்து திருமணம் செய்து வைக்க முடிவு செய்தார்.
திருமண தேதியை முடிவு செய்த பிறகு, ஐஸ்வர்யா காணாமல் போனார். இறுதியாக திரும்பிய பிறகு, ஐஸ்வர்யா தேஜேஸ்வரை திருமணம் செய்ய ஒப்புக்கொண்டார். இறுதியாக, இருவரும் மேற்கூறியபடி மே 18 அன்று திருமணம் செய்து கொண்டனர்.
திருமணத்திற்குப் பிறகு, ஐஸ்வர்யா தொடர்ந்து தொலைபேசியில் பேசிக் கொண்டிருந்தார். தேஜேஷ்வரின் குடும்பத்தினரை, தான் தனது தாயுடன் பேசுவதாக நம்ப வைத்தார். தேஜஸ்வரை கொலை செய்ய காதலன் ராவுடன் சேர்ந்து ஐஸ்வர்யா திட்டம் தீட்டி வந்தார்.
ஐஸ்வர்யா தனது கணவரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க பைக்கில் ஜிபிஎஸ் சாதனத்தைப் பொருத்தியிருந்தார். தேஜேஷ்வரின் நடமாட்டத்தைக் கண்காணிக்க மோகன் என்பவனையும் ஏற்பாடு செய்தார்.
பிப்ரவரி முதல் ஜூன் வரை ஐஸ்வர்யாவும் ராவும் 2,000 தொலைபேசி அழைப்புகளைச் செய்திருப்பதை போலீசார் கண்டறிந்தனர். திருமண நாளன்று கூட, இருவரும் வீடியோ அழைப்பு மூலம் தொடர்பு கொண்டனர்.
இதைத்தொடர்ந்து காணாமல் போன சில நாட்களுக்குப் பிறகு தேஜேஷ்வரின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அந்த நேரத்தில், ஐஸ்வர்யா எந்த பெரிய சோகத்தையும் காட்டவில்லை, இது தேஜேஷ்வரின் குடும்பத்தினரிடையே சந்தேகத்தை ஏற்படுத்தியது.
ஐஸ்வய்ராவின் கும்பல் தேஜேஷ்வரைக் கொல்ல பல முறை முயன்றனர். ஆனால் தோல்வியடைந்தனர். இறுதியாக, அவரைக் கொன்ற பிறகு, அவரது உடலை கால்வாயில் வீசியது தெரியவந்தது. இந்த வழக்கு தொடர்பாக ஐஸ்வர்யா, அவரது தாய் சுஜாதா மற்றும் அவரது காதலன் திருமால் ராவ் உட்பட எட்டு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேலும், முன்பு காவல்துறையில் இருந்த திருமால் ராவின் தந்தையும் கொலைக்கு உதவி செய்ததை போலீசார் கண்டறிந்துள்ளனர்.






