என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்னதாகவே தொடங்க வாய்ப்பு - வானிலை மையம் கணிப்பு
    X

    கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்னதாகவே தொடங்க வாய்ப்பு - வானிலை மையம் கணிப்பு

    • வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தான் தொடங்கும்
    • இந்தாண்டு கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்கூட்டியே தொடங்கும்

    இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்குவதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

    மேலும், இந்தாண்டு 10 நாட்களுக்கு முன்னதாகவே வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை தொடங்க சாதகமான சூழல் உள்ளது. இதனால் ஜூன் மாதத்திற்கு பதிலாக மே மாதமே தென்மேற்கு பருவமழை தொடங்கி விடும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில், கேரளாவில் தென்மேற்கு பருவமழை 4 நாட்கள் முன்கூட்டியே வரும் 27ம் தேதி தொடங்க வாய்ப்புள்ளது என்று இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. வழக்கமாக தென்மேற்கு பருவமழை கேரளாவில் ஜூன் 1 ஆம் தேதி தான் தொடங்கும்.

    முன்னதாக தெற்கு அந்தமான் கடல், தென்கிழக்கு வங்களா விரிகுடா, நிக்கோபார் தீவுகளின் சில பகுதிகளில் வருகிற 13-ந்தேதி தென்மேற்கு பருவமழை உருவாக வாய்ப்பு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.

    Next Story
    ×