என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
இந்தியா

மோடி மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்: நிதிஷ் குமார்

- 2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.
- நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன்.
8-வது முறையாக பீகார் மாநில முதல் மந்திரியாக நிதிஷ்குமார் நேற்று மீண்டும் பதவியேற்றார். பதவி ஏற்புக்கு பிறகு, கவர்னர் மாளிகையில் நிதிஷ்குமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது, பிரதமர் மோடியின் பெயரை குறிப்பிடாமல் அவரை கடுமையாக விமர்சித்தார்.அவர் கூறியதாவது:-
எதிர்காலம் பற்றி யாருக்கும் தெரியாது. ஆனால், 2014-ம் ஆண்டு பதவிக்கு வந்தவர் (மோடி), 2024-ம் ஆண்டு மீண்டும் ஆட்சிக்கு வர மாட்டார்.
நாடு முழுவதும் எதிர்க்கட்சிகளுக்கு புத்துயிரூட்டுவேன். எதிர்க்கட்சிகளே இருக்காது என்று சொன்னவர்கள், நிதிஷ்குமார் இப்போது எதிர்க்கட்சியில் இருப்பதை புரிந்து கொள்ள வேண்டும்.
2024-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் வெற்றிபெற எதிர்க்கட்சிகள் ஒன்றுபட வேண்டும்.
2020-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் பா.ஜனதாவுடன் சேர்ந்து போட்டியிட்டபோது, எங்கள் கட்சியின் பலம் குறைந்தது. ஆனால், 2015-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ராஷ்டிரீய ஜனதாதளத்துடன் சேர்ந்து போட்டியிட்டபோது, எங்கள் பலம் நன்றாக இருந்தது.
கடந்த இரண்டரை மாதங்களில் நடந்த அரசியல் நிகழ்வுகள் அனைவருக்கும் தெரியும். உரிய நேரத்தில் உண்மைகளை அம்பலப்படுத்துவேன். விரைவில் சட்டசபையை கூட்டுவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.