என் மலர்tooltip icon

    இந்தியா

    வந்தே மாதரம் எழுதிய பங்கிம் சந்திரரை அவமதித்த மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - மம்தா சீற்றம்
    X

    வந்தே மாதரம் எழுதிய பங்கிம் சந்திரரை அவமதித்த மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் - மம்தா சீற்றம்

    • நாடு சுதந்திரம் பெற்றபோது மோடி பிறக்கவே இல்லை
    • உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன் என்றார் மோடி

    வந்தே மாதரம் பாடலை எழுதிய பங்கிம் சந்திர சட்டோபாத்யாயை 'பங்கிம் டா' என்று கூறி பிரதமர் நரேந்திர மோடி அவமதித்தற்கு பிரதமர் மோடி மன்னிப்பு கேட்க வேண்டும் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வலியறுத்தி உள்ளார்.

    நேற்று, கூச் பெஹார் மாவட்டத்தில் நடைபெற்ற பேரணியில் உரையாற்றிய மம்தா, நாடு சுதந்திரம் பெற்றபோது மோடி பிறக்கவே இல்லை, ஆனால் வங்காளத்தின் முக்கிய கலாச்சார முகங்களில் ஒருவரை அவர் குறைத்து மதிப்பிட்டார்.

    அவருக்கு நீங்கள் கொடுக்க வேண்டிய குறைந்தபட்ச மரியாதையையும் காட்டவில்லை. இதற்காக நீங்கள் நாட்டிடம் மன்னிப்பு கேட்க வேண்டும். மேற்கு வங்கத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால், மாநிலத்தின் கலாச்சாரம், மொழி மற்றும் பாரம்பரியத்தை அது அழித்துவிடும்" என்று மம்தா கூறினார்.

    தேசிய பாடலான 'வந்தே மாதரம்' பாடலின் 150வது ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் திங்களன்று மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, கவிஞர் பங்கிம் சந்திராவைப் பற்றி பிரதமர் குறிப்பிட்டதில் இருந்து இந்த சர்ச்சை எழுந்துள்ளது.

    பங்கிம் உடன் 'டா' சேர்ப்பதை எதிர்த்த மம்தாவின் திரிணாமுல் காங்கிரஸ் மூத்த எம்.பி. சவுகதா ராய், 'பங்கிம் பாபு' என்று சொல்லுமாறு மோடியை வலியுறுத்தினார்.

    மோடி உடனடியாக, "நான் பங்கிமை 'பாபு' என்று அழைக்கிறேன். நன்றி, உங்கள் உணர்வுகளை நான் மதிக்கிறேன்" என்றார். அதே நேரத்தில், ராய்-ஐ 'தாதா' என்று அழைக்கலாமா என்று மோடி சந்தேகம் கேட்டார். டா என்பது வங்காள மொழியில் சாதாராண சம்பாஷணையின்போது குறிப்பிடும் விளிச் சொல்லாகும்.

    Next Story
    ×