என் மலர்
இந்தியா

பிரதமர் மோடி புதினை சந்திப்பதற்கு சற்றுமுன், இந்திய உறவு குறித்து அமெரிக்க தூதரகம் வெளியிட்ட பதிவு..!
- அமெரிக்கா- இந்தியா இடையிலான கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது.
- இது 21-ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் மிகச்சிறந்த உறவு.
வரி விதிப்பு, ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு ஆகியவற்றில் இந்தியா, நமது சொல்லை கேட்கும் என அமெரிக்கா நினைத்தது. ஆனால் வரி விதிப்பு நெருக்கடியை அதிகரிக்கும். ஆனால் நாம் அதை சமாளிப்போம் என பிரதமர் மோடி தெரிவித்திருந்தார். மேலும், ரஷியாவில் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதை நிறுத்த இந்தியா மறுத்துவிட்டது.
இந்த நிலையில்தான் சீனாவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் உச்சி மாநாட்டில் கலந்து கொள்வதற்காக இந்திய பிரதமர் மோடி சீனா சென்றார். அங்கு சீனா அதிபர் ஜி ஜின் பிங் மற்றும் ரஷிய அதிபர் புதின் ஆகியோரை சந்தித்து பேசினார்.
அமெரிக்கா வரி விதிப்பில் கடின நடவடிக்கை எடுப்பதால் இந்தியா சீனா மற்றும் ரஷியா உடனான உறவை வலுப்படுத்தும் வகையில் இந்த சந்திப்பு அமைந்தது.
புதின் சந்திப்புக்கு சற்று முன்னதாக, இந்தியா- அமெரிக்கா இடையிலான உறவு குறித்து இந்தியாவில் உள்ள அமெரிக்க தூதரகம் எக்ஸ் பக்கத்தில் ஒரு பதிவு வெளியிட்டது.
அதில் "அமெரிக்கா- இந்தியா இடையிலான கூட்டாண்மை தொடர்ந்து புதிய உயரங்களை எட்டுகிறது. இது 21-ஆம் நூற்றாண்டை வரையறுக்கும் மிகச்சிறந்த உறவு. நமது மக்கள் மற்றும் நமது முன்னேற்றத்திற்கான சாத்தியக்கூறுகளை நாங்கள் முன்னிலைப்படுத்துகிறோம்.
புதுமை, தொழில்முனைவு, பாதுகாப்பு மற்றும் இருதரப்பு உறவுகள் என அனைத்து துறைகளிலும் நமது இருநாட்டு மக்களுக்கு இடையிலான நீடித்த நட்புதான் இந்தப் பயணத்தின் எரிசக்தியாக விளங்குகிறது" என்று தெரிவித்து உள்ளது.






