என் மலர்
இந்தியா

வரும் சட்டமன்ற தேர்தலுக்கு பிறகு சந்திரபாபு நாயுடு மனநல சிகிச்சை பெற வேண்டும்: ரோஜா
- வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.
- ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.
திருப்பதி:
ஆந்திர மாநில இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு துறை மந்திரி ரோஜா காக்கிநாடா மாவட்டம் சமல் கோட்டில் உள்ள சாளுக்கிய குமார ராம பீமேஸ்வர சாமி கோவிலில் தரிசனம் செய்தார்.
இதையடுத்து ராஜ நகரத்தில் உள்ள பல்கலைக்கழகத்தில் தேசிய அளவிலான பளு தூக்கும் சாம்பியன்ஷிப் போட்டியை தொடங்கி வைத்தார்.
வரும் 2024 சட்டமன்ற தேர்தலில் மக்கள் மனதில் இடம் பிடித்துள்ள முதல் மந்திரி ஜெகன்மோகன் ரெட்டி வெற்றி பெறுவது உறுதி.
தெலுங்கு தேசம் கட்சித் தலைவர் சந்திரபாபு நாயுடு, ஜனசேனா கட்சி தலைவர் பவன் கல்யாண் ஆகியோர் தோல்வி அடைவார்கள். தோல்வி அடைந்த பிறகு இருவரும் மனநல கோளாறுகளுக்கு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற வேண்டும்.
ஜெகன்மோகன் ரெட்டி மீண்டும் முதல் மந்திரியாக வர வேண்டும் என்பதற்காக சாமியிடம் பிரார்த்தனை செய்தேன்.
ஆண்களுக்கு இணையாக அனைத்து துறைகளிலும் பெண்கள் போட்டி போட்டு சாதிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.






