என் மலர்

  இந்தியா

  இந்தியா வெல்லும்; கிரிக்கெட்டிலா, தேர்தலிலா?: ஸ்டாலின் கருத்தால் சூடு பிடிக்கும் விவாதம்
  X

  "இந்தியா வெல்லும்"; கிரிக்கெட்டிலா, தேர்தலிலா?: ஸ்டாலின் கருத்தால் சூடு பிடிக்கும் விவாதம்

  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • Whatsapp
  • Telegram
  • Linkedin
  • Print
  • koo
  • "ட்ராஃபி டூர்" தற்போது சென்னையை வந்தடைத்திருக்கிறது
  • பா.ஜ.க.விற்கு எதிரான "இந்தியா" கூட்டணியில் தி.மு.க.வும் அங்கம் வகிக்கிறது

  வரும் அக்டோபர் 5 முதல் நவம்பர் 19 வரை இந்தியாவில் ஐ.சி.சி. ஆண்கள் உலக கோப்பைக்கான போட்டித்தொடர் நடைபெறவிருக்கிறது. நான்கு வருடங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இந்த உலக கோப்பை போட்டி, தற்போது 2023ல் 13-வது போட்டி தொடராக நடக்க இருக்கிறது.

  போட்டிக்கு முன்னதாக "ட்ராஃபி டூர்" எனும் வழக்கப்படி ஓவ்வொரு நாட்டின் முக்கிய நகரங்களிலும் இந்த கோப்பை பார்வைக்கு எடுத்து செல்லப்படும். அதன்படி சென்னைக்கு கொண்டு வரப்பட்ட போது தமிழ்நாட்டின் கிரிக்கெட் சங்க தலைவரும், அமைச்சர் பொன்முடியின் மகனுமான அசோக் சிகாமணியின் முன்னிலையில் தமிழக முதல்வர் இக்கோப்பையுடன் எடுத்து கொண்ட புகைப்படத்தை தனது அதிகாரபூர்வ எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்து கொண்டார்.

  அதனுடன் "இந்தியா வெற்றி பெறும்" என ஒரு குறுஞ்செய்தியை ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

  அடுத்த வருடம் நடைபெறவிருக்கும் இந்திய பாராளுமன்ற தேர்தலில் ஆளும் பா.ஜ.க.விற்கு எதிராக "இந்தியா கூட்டணி" எனும் பெயரில் பல மாநிலங்களில் இருந்து 25க்கும் மேற்பட்ட கட்சிகள் அமைத்திருக்கும் கூட்டணியில் தி.மு.க.வும் ஒரு உறுப்பினர் என்பதால், ஸ்டாலின் இந்திய கிரிக்கெட் அணியுடன் சேர்த்து, தங்களது அரசியல் கூட்டணியும் வெற்றி பெறும் என மறைமுகமாக தெரிவித்திருப்பதாக சமூக வலைதளங்களில் கருத்துக்கள் பரிமாறிக் கொள்ளப்படுகிறது.

  Next Story
  ×