என் மலர்
இந்தியா

மோட்டார் சைக்கிளில் ஒட்டகத்தை ஏற்றி சென்ற வாலிபர்கள்- வீடியோ
- வழக்கமாக மோட்டார் சைக்கிள்களில் குறிப்பிட்ட அளவு பொருட்கள் ஏற்றி செல்வதற்கே சிலர் படாதபாடுபடுவார்கள்.
- சில வாகன ஓட்டிகள் தங்களது மோட்டார் சைக்கிளில் 4, 5 பேர் வரை ஏற்றி செல்வது போன்று காட்சிகளும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன
சமூக வலைதளங்களில் வெளியாகும் சில வீடியோக்கள் பயனர்களை வியக்க வைக்கும். அது போன்ற ஒரு வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. அதில், 2 வாலிபர்கள் மோட்டார் சைக்கிளில் செல்கின்றனர். அதில் ஒருவர் மோட்டார் சைக்கிளை ஓட்டுகிறார். அவரது பின்னால் ஒருவர் அமர்ந்திருக்கிறார். அவர்களுக்கிடையே ஒரு பெரிய ஒட்டகத்தை வைத்து கொண்டு மோட்டார் சைக்கிளை வேகமாக ஓட்டுவது போன்ற காட்சிகள் உள்ளது.
வழக்கமாக மோட்டார் சைக்கிள்களில் குறிப்பிட்ட அளவு பொருட்கள் ஏற்றி செல்வதற்கே சிலர் படாதபாடுபடுவார்கள். அதே நேரம் சில வாகன ஓட்டிகள் தங்களது மோட்டார் சைக்கிளில் 4, 5 பேர் வரை ஏற்றி செல்வது போன்று காட்சிகளும் ஏற்கனவே சமூக வலைதளங்களில் வெளிவந்துள்ளன.
இந்நிலையில் பைக்கில் கொண்டு செல்ல முடியாத அளவுள்ள பெரிய ஒட்டகத்தை வாலிபர்கள் ஏற்றி சென்ற இந்த வீடியோ வைரலாகி பயனர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.






