என் மலர்tooltip icon

    இந்தியா

    திருமண வாக்குறுதி அளித்து பாலியல் துன்புறுத்தல்: திருமணமான பெண் கொடுத்த புகாரில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு
    X

    திருமண வாக்குறுதி அளித்து பாலியல் துன்புறுத்தல்: திருமணமான பெண் கொடுத்த புகாரில் நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

    • திருமணமான பெண், பொய் வாக்குறுதி கொடுத்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக ஒரு ஆண் மீது புகார்.
    • ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும்.

    திருமண வாக்குறுதி அடிப்படையில் பாலியல் உறவுக்கு பிறகு திருமணமான பெண் புகார்: கேரள உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு/ Married woman cannot claim she was coerced into sex on false promise of marriage Kerala High Court

    திருமணம் செய்வதாக வாக்குறுதி கொடுத்து, தன்னை பாலியல் வன்கொடுமை செய்ததாக திருமணம் செய்த பெண் ஆண் ஒருவர் மீது குற்றம் சுமத்த முடியாது என கேரள மாநில உயர்நீதிமன்றம் பரபரப்பு தீர்பபை வழங்கியுளளது.

    திருமணம் செய்வதாக பொய் வாக்குறுதி அளித்து பாலியல் தொந்தரவு கொடுத்ததுடன், 2.5 லட்சம் ரூபாய் கடன் பெற்ற பிறகு தனது போட்டோவை வெளியிட்டு விடுவேன் என மிரட்டுவதாக, ஆண் மீது பெண் ஒருவர் புகார் அளித்துள்ளார்.

    இந்த புகார் அடிப்படையில் போலீசார் பொய் வாக்குறுதி அளித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக அந்த நபர் மீது போலீசார் கடுமையான பிரிவில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். இந்த பிரிவின் கீழ் அவருக்கு 10 வருடம் சிறைத்தண்டனை கிடைக்கும்.

    வழக்குப்பதிவு செய்த நிலையில் ஜூன் 13ஆம் தேதி போலீசார் அவரை கைது செய்தனர். தனக்கு ஜாமின் வழங்கக்கோரி கேரள மாநில உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

    இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிமன்றம் "திருமண வாக்குறுதியின் அடிப்படையில் பாலியல் வன்கொடுமை தொடர்பான வழக்குகளைக் கருத்தில் கொள்ளும்போது, நீதிமன்றம் இந்த நேரத்தில் அந்த உறவு சம்மதத்துடன் நடந்ததா? இல்லையா? என்பது குறித்து ஒரு முடிவுக்கு வருவது கடினம் என்பது கவனிக்கப்படுகிறது.

    குறிப்பாக ஒரு திருமணமான பெண் வேறொரு நபருடன் உடல் உறவில் ஈடுபடும்போது முழு சூழ்நிலைகளையும் கருத்தில் கொள்ள வேண்டும். இரு தரப்பினரும் தங்களுடைய முந்தைய திருமணம் பற்றி அறிந்திருந்தால், அவர்களுக்கிடையேயான பாலியல் உடலுறவு திருமணம் செய்து கொள்வதாக வாக்குறுதியுடன் நடந்ததாகக் கூற முடியாது" எனத் தெரிவித்துள்ளது.

    எனினும், இந்த உத்தரவு இந்த வழக்கிற்கு மட்டுமே பொருந்தும். ஒவ்வொரு வழக்கின் உண்மை மற்றும் சூழ்நிலை கருத்தில் கொள்ளப்படும் எனவும் தெரிவித்துள்ளது.

    மேலும், அந்த நபருக்கு ஜாமின் வழங்கியது.

    Next Story
    ×