என் மலர்tooltip icon

    இந்தியா

    மரணத்தை வென்ற பயணி..! எமர்ஜென்சி வழியாக குதித்து உயிர் பிழைத்த அதிசயம்
    X

    மரணத்தை வென்ற பயணி..! எமர்ஜென்சி வழியாக குதித்து உயிர் பிழைத்த அதிசயம்

    • ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது.
    • விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணித்த ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    குஜராத் மாநிலம் அகமதாபாத்தின் சர்தார் வல்லபாய் படேல் சர்வதேச விமான நிலையத்தில் இருந்து லண்டன் (காட்வீக்) புறப்பட்ட ஏர் இந்தியா போயிங் 787 விமானம் விமானம் விழுந்து நொறுங்கி விபத்துக்குள்ளானது.

    இந்த விமானத்தில் 242 பேர் பயணம் செய்துள்ள நிலையில், இதுவரை 170 பேர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும், பலி எண்ணிக்கை உயரக்கூடும் எனவும் அஞ்சப்படுகிறது.

    இந்நிலையில், ஏர் இந்தியா விமான விபத்தில் பயணி ஒருவர் உயிர் பிழைத்துள்ளதாக குஜராத் காவல்துறை தெரிவித்துள்ளது. விமானத்தின் 11ஏ இருக்கையில் பயணித்த ஒருவர் உயிர் பிழைத்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர்.

    ஏர் இந்தியா விமானத்தில் 242 பேர் பயணித்த நிலையில் விமானத்தில் பயணம் செய்த அஜய் குமார் ரமேஷ் (40) உயிர் தப்பியுள்ள நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

    மார்பு, கண் உள்ளிட்ட இடங்களில் ரமேஷூக்கு காயம் ஏற்பட்டுள்ளதால் அவர் சிகிச்சை பெற்று வருகிறார்.

    Next Story
    ×