என் மலர்
இந்தியா

பரபரப்பான சாலையில் நாற்காலி போட்டு அமர்ந்த நபர்: அடுத்து நடந்த விபரீதம்- வீடியோ
- பரபரப்பான சாலையில் வாகனங்களுக்கு பயப்படாமல் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார்.
- லாரி இடித்ததில் அந்த நபர் நாற்காலியில் இருந்து கீழே சாலையில் விழுகிறார்.
உத்தரபிரதேச மாநிலம் பிரதாப்கரில் சாலையின் நடுவே, அதுவும் அங்குள்ள ஒரு போலீஸ் சாவடிக்கு முன்னால் ஒரு நபர் நாற்காலியில் அமர்ந்து இருக்கிறார்.
அந்த நபர் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக அங்கு அமர்ந்து போராட்டம் நடத்துகிறாரா அல்லது ரவுடித்தனத்தை வெளிப்படுத்தும் வகையில் அமர்ந்திருந்தாரா என்பது தெளிவாகத் தெரியவில்லை.
இருப்பினும், பரபரப்பான சாலையில் வாகனங்களுக்கு பயப்படாமல் அவர் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். பரபரப்பான சாலையில் அவரை கடந்த இருபுறமும் வாகனங்கள் தொடர்ந்து செல்கிறது. அப்போது அந்த வழியாக சென்ற லாரி ஒன்று அவரை இடித்து செல்லும் சம்பவம் அங்குள்ள கேமராவில் பதிவாகியுள்ளது.
ரன்விஜய் சிங் என்ற பத்திரிகையாளர் இந்த சம்பவத்தை எக்ஸ் தளத்தில் பதிவு செய்து வீடியோவை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உ.பி.யில் ஒரு நபர் போலீஸ் சாவடி முன் நடுரோட்டில் நாற்காலியில் அமர்ந்திருக்கிறார். சாலையின் நடுவில் அமர்ந்திருந்த அவரை ஒரு லாரி நெருங்கி வருகிறது. லாரி அவரை இடித்ததை காட்டுகிறது.
லாரி இடித்ததில் அந்த நபர் நாற்காலியில் இருந்து கீழே சாலையில் விழுகிறார். லாரி அவர் மீது மோதிவிட்டு நிற்காமல் தொடர்ந்து செல்கிறது.
லாரி அவரை மோதினாலும், கீழே விழுந்த அந்த நபர் தனது நிலையில் இருந்து ஒரு அங்குலம் கூட நகரவில்லை.
தொடர்ந்து சாலையில் எப்படி விழுந்தோரோ அப்படியே அமர்ந்து இருக்கிறார். மேலும் அவரது நாற்காலி உடைந்தது. வாகனங்கள் மோதி விடும் என்ற அச்சமின்றி சாலையில் தொடர்ந்து அவர் அமர்ந்திருக்கிறார். மீண்டும் தொடர்ந்து வாகனங்கள் அவரை கடந்து இருபுறமும் செல்கிறது.
போலீஸ் சாவடியின் வாசலில் ஒருவர் நின்றதாகவும், ஆனால், அவர் இந்த சம்பவம் குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்றும் தெரிய வந்துள்ளது.






