என் மலர்
இந்தியா

என்ன கொடுமை சார் இது! ஆன்லைனில் ஆர்டர் செய்த முட்டை... பார்சலைப் பிரித்த இளைஞருக்கு ஷாக் - வீடியோ
- ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
- பயனர்கள் பலரும் ஆன்லைன் ஆர்டரில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பதிவிட்டனர்.
சமீபகாலமாக அத்தியாவசிய பொருட்கள் மற்றும் வீட்டு உபயோக பொருட்களை ஆன்லைன் மூலம் ஆர்டர் செய்து வீட்டிற்கே வரவழைக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. இவ்வாறு ஆர்டர் செய்யும் போது வேறு பொருட்கள் வருவதாகவும் புகார்கள் எழுந்த வண்ணம் உள்ளன.
இந்நிலையில் சமீபத்தில் ராஜ்கன்வர் என்ற வாலிபர் ஆன்லைன் தளமான பிளிங்கிட்டில் இருந்து முட்டைகள் உள்ள டிரேவை ஆர்டர் செய்தார். அதன்படி முட்டைகளுடன் கூடிய டிரே வந்தது. ஆனால் அதில் அழுகிய முட்டைகள் இருந்ததால் அதிர்ச்சி அடைந்த அவர் அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவிட அது வைரலானது.
வீடியோவில் அவர் தனது பால்கனியில் நின்று கொண்டு தனக்கு ஆர்டர் வந்த முட்டைகளின் நிலையை காட்டுகிறார். அப்போது முட்டை உடைந்தவுடன் அவை அனைத்தும் கெட்டுபோய் துர்நாற்றம் வீசுவதாக கூறுகிறார். அதோடு முட்டைகளை உடைத்ததும் எவ்வளவு கருப்பாக இருக்கிறது என காட்டுகிறார். இந்த வீடியோ 5 லட்சத்திற்கும் அதிகமான பார்வைகளை பெற்ற நிலையில் பயனர்கள் பலரும் ஆன்லைன் ஆர்டரில் தங்களுக்கு நேர்ந்த அனுபவங்களை பதிவிட்டனர்.






