என் மலர்
இந்தியா

VIDEO: காட்டாற்று வெள்ளத்திற்கு நடுவே தொங்கு பாலத்தில் ஆற்றை ஆபத்தான முறையில் கடக்கும் நபர்
- பருவமழை காலத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்யும்.
- ஆபத்தான முறையில் ஒருவர் ஆற்றை கடக்கும் வீடியோ இணையத்தில் வைரல்
வடகிழக்கு மாநிலங்களில் தொடர்ச்சியாக பெய்த கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில், அருணாச்சலப் பிரதேசத்தில் அஞ்சாவ் மாவட்டத்தில் உள்ள காட்டாற்றுக்கு குறுக்கே அமைக்கப்பட்டுள்ள தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் ஒருவர் கடக்கும் வீடியோ இணையத்தில் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
இந்த விடியோவை மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "பருவமழை காலத்தில் அருணாச்சலப் பிரதேசத்தில் உலகிலேயே அதிக மழை பெய்யும். இந்தியா, சீனா மற்றும் மியான்மர் எல்லையின் முக்கோண சந்திப்புக்கு அருகில் உள்ள அருணாச்சலப் பிரதேசத்தின் அஞ்சாவ் மாவட்டத்தில் பாரம்பரிய தொங்கு பாலத்தை ஆபத்தான முறையில் ஒருவர் கடக்கும் வீடியோ கிடைத்தது. தயவுசெய்து கவனமாகவும் பாதுகாப்பாகவும் இருங்கள். அரசு உங்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் வழங்கும்" என்று பதிவிட்டுள்ளார்.






