என் மலர்
இந்தியா

மனைவியின் உடல் பாகங்களை துண்டு துண்டாக வெட்டி வீசிய கணவர்
- சலாவுதீன் சகோதரியை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விட்ஸ் ஆப் செய்யப்பட்டு இருந்தது.
- சந்தேகத்தின் பேரில் சலாவுதீன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
உத்தரபிரதேசத்தின் சிராவஸ்தியில் 31 வயது நபர் ஒருவர் தனது மனைவியைக் கொன்று, குற்றத்தை மறைக்க முயன்று அவரது உடலை துண்டு துண்டாக வெட்டி வீசிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
தம்பதிகளான சைஃபுதீன் மற்றும் அவரது மனைவி சபீனா ஆகியோர் இந்த வார தொடக்கத்தில் லக்னோவுக்கு செல்வதாக குடும்பத்தினரிடம் கூறி விட்டு சென்றுள்ளனர். ஆனால் அன்றைய தினமே சைஃபுதீன் அதே பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்ததை சபீனாவின் சகோதரர் சலாவுதீன் பார்த்துள்ளார். இதையடுத்து சலாவுதீன் சகோதரியை தொடர்பு கொண்ட போது அவரது செல்போன் ஸ்விட்ஸ் ஆப் செய்யப்பட்டு இருந்தது. இதனை தொடர்ந்து சந்தேகத்தின் பேரில் சலாவுதீன் அருகிலுள்ள காவல் நிலையத்தில் புகார் அளித்தார்.
புகாரை தொடர்ந்து போலீசார் சைஃபுதீனை அழைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது சபீனா குறித்து தெரியாது என்று கூறிய சைஃபுதீனை போலீசார் இரண்டு நாட்கள் காவலில் வைத்து விசாரித்தனர். இதனை தொடர்ந்து சைஃபுதீன் மனைவியை கொலை செய்ததை ஒப்புக்கொண்டார். சபீனா கொலை செய்து குற்றத்தை மறைக்க அவரது உடலை துண்டுதுண்டாக வெட்டி ஷ்ரவஸ்தி பகுதியில் இருந்து 10 கிலோமீட்டர் தூரத்தில் வீசியதாகவும், மேலும் சபீனாவின் கையை எரித்து தோட்டத்தில் மறைத்து வைத்ததாகவும் தெரிவித்தார். இதைக்கேட்டு அதிர்ச்சி அடைந்த போலீசார் சைஃபுதீன் மீது வழக்கு பதிவு செய்து நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி சிறையில் அடைத்தனர்.
இதனிடையே, சபீனாவின் பெற்றோர் கூறுகையில், சைஃபுதீனும், அவரது தாயாரும் வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாகவும், இதன் காரணமாகவே சபீனை கொலை செய்திருக்கிறார்கள் என்றும் கூறினார்.






