என் மலர்
இந்தியா
வயநாடு இடைத்தேர்தல்- 4 லட்சம் வாக்கு வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி வெற்றி: லைவ் அப்டேட்ஸ்
- மகாராஷ்டிராவில் 288 தொகுதிகளுக்கு ஒரே கட்டமாக கடந்த 20-ந்தேதி தேர்தல் நடைபெற்றது.
- ஜார்க்கண்ட் மாநிலதில் 81 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெற்றது.
மகாராஷ்டிரா மாநில சட்டசபை தேர்தல், ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல், வயநாடு இடைத்தேர்தல், பல்வேறு மாநிலங்களில் நடைபெற்ற மக்களவை மற்றும் சட்டமன்ற தொகுதி தேர்தலுக்கான வாக்குகள் எண்ணிக்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
Live Updates
- 23 Nov 2024 12:27 PM IST
மகாயுதி கூட்டணிக்கு அமோக வெற்றி கிடைக்கும் என முன்னதாகவே கூறுியிருந்தேன். சமூகத்தின் அனைத்து பிரிவினருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். முதலமைச்சர் பதவி தொடர்பாக இன்னும் முடிவு எடுக்கப்படவில்லை என சிவசேனா தலைவர் ஏக்நாத் ஷிண்டே தெரிவித்துள்ளார்.
- 23 Nov 2024 12:03 PM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க கூட்டணி 222 இடங்களில் முன்னிலை வகிக்கிறது. மகா விகாஸ் கூட்டணி 53 இடங்களில் முன்னிலை.
ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 50 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- 23 Nov 2024 11:54 AM IST
ஜார்க்கண்ட் மாநிலத்தில் ராஷ்டிரிய ஜனதா தளம் கட்சி 6 தொகுதிகளில் போட்டியிட்ட நிலையில் 5 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. கடந்த முறை ஒரு எம்.எல்.ஏ. மட்டுமே பெற்றிருந்த நிலையில் தற்போது ஆச்சர்யம் அளிக்கம் வகையில் முன்னிலை பெற்றுள்ளது.
- 23 Nov 2024 11:51 AM IST
ஜார்க்கண்டில் பா.ஜ.க. வேட்பாளரும், முன்னாள் முதல்வருமான சம்பாய் சோரன் 18,311 வாக்குகள் முன்னிலை பெற்றுள்ளார்.
- 23 Nov 2024 11:23 AM IST
ஜார்க்கண்டில் இந்தியா கூட்டணி 49 இடங்களில் முன்னிலை பெற்றுள்ளது. பா.ஜ.க. கூட்டணி 30 இடங்களில் முன்னிலை வகிக்கிறது.
- 23 Nov 2024 11:22 AM IST
மகாராஷ்டிரா மும்பாதேவி தொகுதியில் சிவசேனா வேட்பாளர் ஷைனா என்.சி. 7716 வாக்குகள் பின்தங்கியுள்ளார். இவர் வேட்புமனு தாக்கல் செய்வதற்கான கடைசி நாளுக்கு முந்தைய தினம் பா.ஜ.கவில் இருந்து சிவசேனா கட்சிக்கு மாறினார் என்பது குறிப்பிடத்தக்கது.
- 23 Nov 2024 11:07 AM IST
மகாராஷ்டிராவில் பா.ஜ.க. கூட்டணி மெஜாரிட்டி எண்ணிக்கையை தாண்டி முன்னிலை வகிப்பதால் தொண்டர்களுக்கு இனிப்புகள் வழங்க பா.ஜ.க. அலுவலத்திற்கு வந்த ஸ்வீட் பார்சல்கள்.


















