என் மலர்
இந்தியா

சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா: நேரில் அழைத்து பாராட்டிய மகாராஷ்டிர கவர்னர்
- பிடே மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் சாம்பியன் பட்டம் வென்றார்.
- சாம்பியன் பட்டம் வென்று நாக்பூர் விமான நிலையம் வந்த அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
மும்பை:
பிடே மகளிர் உலகக் கோப்பை தொடரில் இந்திய வீராங்கனை திவ்யா தேஷ்முக் (19), சாம்பியன் பட்டம் வென்று கிராண்ட்மாஸ்டர் அந்தஸ்து பெற்றார்
சாம்பியன் பட்டம் வென்ற தேஷ்முக் இந்தியா திரும்பினார். நாக்பூர் விமான நிலையத்தில் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.
இதற்கிடையே, மகாராஷ்டிர அரசு சார்பில் திவ்யா தேஷ்முக்குக்கு பாராட்டு விழா நாக்பூரில் நடந்தது. இதில் முதல் மந்திரி தேவேந்திர பட்னாவிஸ் கலந்துகொண்டு திவ்யாவை பாராட்டியதுடன் ரூ.3 கோடிக்கான காசோலையை வழங்கினார்.
இந்நிலையில், சாம்பியன் பட்டம் வென்ற திவ்யா தேஷ்முக்கை ராஜ்பவனுக்கு வரவழைத்த மகாராஷ்டிர கவர்னர் சி.பி.ராதாகிருஷ்ணன் நேரில் அழைத்து பாராட்டு தெரிவித்தார்.
Next Story






