என் மலர்
இந்தியா

மக்களவை தேர்தல்: 102 தொகுதிகளில் 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகள் பதிவு
- 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.
- தமிழகத்தில் 9 மணி நிலவரப்படி 12.55 சதவீதம் வாக்குகள் பதிவு.
மக்களவை தேர்தல் இன்று நாடு முழுவதும் உள்ள 21 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் உள்ள 102 தொகுதிகளில் வாக்குப்பதிவு தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் 21 மாநிலங்களில் இதுவரை பதிவாகியுள்ள வாக்குப்பதிவு சதவீதத்தை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.
அதன்படி, 21 தொகுதிகளில் 9 மணி நிலவரப்படி 9.7 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக அறிவிக்கப்பட்டது.
தொடர்ந்து, 11 மணி நிலவரப்படி 24.5 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளது.
உத்தரகாண்டில் 24.83 சதவீதமும், உத்தரப் பிரதேசத்தில் 25 சதவீதமும், மத்திய பிரதேசத்தில் 30.5 சதவீதமும், மகாராஷ்டிராவில் 19.2 சதவீதமும் வாக்குகள் பதிவாகியுள்ளன.
Next Story






