டெல்லி கார் வெடிப்பு - பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்

குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளதுமற்ற மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
டெல்லி கார் வெடிப்பு -  பாதுகாப்பு காரணங்களுக்காக செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் மூடல்
Published on

டெல்லி செங்கோட்டை அருகே கடந்த 10-ந் தேதி கார் மூலம் நடத்தப்பட்ட தாக்குதலில் 13 பேர் கொல்லப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தியது.

இந்த சம்பவம் குறித்து தேசிய புலனாய்வு முகமை (என்.ஐ.ஏ.) விசாரித்து வருகிறது.

'டெல்லியில் நடந்தது பயங்கரவாத தாக்குதல்' என்றும் அதில் தொடர்புடைய குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.

இந்நிலையில் செங்கோட்டை அருகே நிகழ்ந்த கார் வெடிப்பு சம்பவத்தை அடுத்து பாதுகாப்பு காரணங்களுக்காக மறு அறிவிப்பு வரும் வரை செங்கோட்டை மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்படுவதாக மெட்ரோ நிர்வாகம் அறிவித்துள்ளது.

டெல்லி லால் குய்லோ மெட்ரோ ரெயில் நிலையம் மூடப்படுவதாகவும் மற்ற மெட்ரோ ரெயில் நிலையங்கள் வழக்கம் போல் செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Calendar Epaper
X

Maalai Malar
www.maalaimalar.com