என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என நகைச்சுவை நடிகர் விமர்சித்ததில் தவறு ஏதுமில்லை: உத்தவ் தாக்கரே
    X

    ஏக்நாத் ஷிண்டேவை துரோகி என நகைச்சுவை நடிகர் விமர்சித்ததில் தவறு ஏதுமில்லை: உத்தவ் தாக்கரே

    • சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது.
    • தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.

    நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா, மராட்டிய துணை முதல்-மந்திரி ஏக்நாத் ஷிண்டேவை காடர் (துரோகி) என்று நகைச்சுவையாக விமர்சனம் செய்தார்.

    தில் தோ பாகல் ஹை படத்தின் பிரபலமான இந்தி பாடலை பாடி சிவசனோ மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சி பிளவுகள் குறித்தும் மற்றும் மகாராஷ்டிராவின் தற்போதைய அரசியல் நிகழ்வுகளையும் நகைச்சுவையாக நிகழ்த்தினார் நடிகர் குணால் கம்ரா (stand-up comedian).

    சிவசேனா முதலில் பா.ஜ.க.வில் இருந்து வெளியே வந்தது. பின்னர் சிவசேனா, சிவசேனாவில் இருந்து வெளியே வந்தது. தேசியவாத காங்கிரஸ் கட்சியில் இருந்து தேசியவாத காங்கிரஸ் கட்சி வெளிவந்தது.

    அவர்கள் ஒரு வாக்காளருக்கு 9 பொத்தான்களை கொடுத்தார்கள். இதனால் எல்லோரும் குழப்பம் அடைந்தார்கள் என்று அவர் மேலும் நிகழ்ச்சியின்போது நகைச்சுவையாக குறிப்பிட்டு உள்ளார். அத்துடன் ரிக்ஷா ஒட்டுபவர், ஒருவரின் தந்தையை திருடிய துரோகி என்றார்.

    இந்த நிகழ்ச்சியை கேட்டு ஏக்நாத் ஷிண்டேவின் ஆதரவாளர்கள் கடும் ஆத்திரம் அடைந்தனர். அவர்கள் மும்பை கார் பகுதியில் உள்ள ஓட்டலில் நகைச்சுவை நடிகர் குணால் கம்ரா நிகழ்ச்சி நடத்திய பகுதியை சூறையாடி சேதப்படுத்தினர். மேலும் ஷிண்டேவை சாடி அவர் பேசிய வீடியோவை வெளியிட்டு அவர் மீது வழக்குப்பதிவு செய்ய வேண்டும் என்று போலீசாரிடம் புகார் செய்துள்ளனர்.

    மேலும் 2 நாட்களில் நடிகர் குணால் கம்ரா மன்னிப்பு கேட்க வேண்டும் மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவரை சிவசேனா தொண்டர்கள் மகாராஷ்டிராவில் சுதந்திரமாக வெளியே நடமாட விடமாட்டார்கள் என்று சிவசேனா கட்சி எம்.எல்.ஏ. ஒருவர் மிரட்டல் விடுத்துள்ளார்.

    இந்த நிலையில் தாக்குதல் நடத்திய சிவசேனா கட்சியின் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுதி வருகின்றனர்.

    இந்த நிலையில் ஏக்நாத் ஷிண்டேவை துரோகி எனக் கூறியதில் தவறு ஏதும் இல்லை என உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    இது தொடர்பாக உத்தவ் தாக்கரே கூறியதாவது:-

    குணால் கம்ரா வெறுமன தனது பார்வையை வெளிப்படுத்தியுள்ளார். அவர் உண்மைகளைக் கூறி பொது மக்களின் கருத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

    கம்ரா எதுவும் தவறாக செய்யவில்லை. இந்த துரோகிகள் சத்ரபதி சிவாஜி மகாராஜாவை இழிவுப்படுத்திய பிரஷாந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் ஆகியோரை பார்க்கவில்லை.

    இவ்வாறு உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.

    நாக்பூரை சேர்ந்த பத்திரிகையாளர் பிரசாஷந்த் கோரட்கார், நடிகரை ராகுல் சோலாபூர்கார் சத்ரபதி சம்பாஜி மகாராஜா மற்றும் சத்ரபதி சிவாஜி மகாராஜா ஆகியோருக்கு எதிராக ஆட்சேபனை கருத்து தெரிவித்ததாக, இருவரையும் கைது செய்ய வேண்டும் போராட்டம் நடைபெற்றது சுட்டிக்காட்டி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

    Next Story
    ×