search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ
    X

    கிரண் ரிஜிஜூ

    இந்தியாவை பிரிக்க மக்களை தூண்டி விடுகிறார் ராகுல் காந்தி - மத்திய மந்திரி கிரண் ரிஜிஜூ

    • ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும்.
    • ஆனால் வெளிநாட்டினருக்கு தெரியாது என மத்திய மந்திரி ரிஜிஜூ தெரிவித்தார்.

    புதுடெல்லி:

    காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி இங்கிலாந்து நாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல்வேறு இடங்களில் பேசி வருகிறார்.

    கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பேசுகையில், இந்திய ஜனநாயகம் மற்றும் நீதிமன்ற அமைப்பு தாக்குதலுக்கு ஆளாகி இருக்கின்றன என குற்றம்சாட்டினார். அதைத்தொடர்ந்து, லண்டன் நகரில் பேசுகையில், இந்தியாவில் ஜனநாயகம் மீட்டெடுக்கப்பட அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் தலையிட வேண்டும் என அவர் பேசியது சர்ச்சையை ஏற்படுத்தியது.

    ராகுல் காந்தியின் பேச்சுக்கு பா.ஜ.க. கடும் கண்டனம் தெரிவித்தது. இந்தியர்களை ராகுல் காந்தி அவமதிப்பு செய்து விட்டார் என தெரிவித்தது.

    இந்நிலையில், மத்திய சட்ட மந்திரி கிரண் ரிஜிஜூ ராகுல் காந்தி பேச்சுக்கு கண்டனம் தெரிவித்தார். இதுதொடர்பாக, கிரண் ரிஜிஜூ வெளியிட்டுள்ள டுவிட்டர் செய்தியில் கூறியதாவது:

    காங்கிரஸ் கட்சியில் தன்னை இளவரசராக அறிவித்துக் கொண்ட ராகுல் காந்தி அனைத்து எல்லைகளையும் மீறிவிட்டார்.

    இந்தியாவின் ஒற்றுமைக்கு தீவிர ஆபத்து நிறைந்த மனிதராக அவர் மாறி இருக்கிறார். அவர் தற்போது இந்தியாவை பிரிக்க மக்களைத் தூண்டிவிடும் வேலையை செய்துவருகிறார்.

    இந்தியாவின் மிக பிரபலம் வாய்ந்த மற்றும் அன்பு செலுத்தப்படுகிற மதிப்புமிக்க பிரதமர் மோடியின் ஒரே மந்திரம் என்னவென்றால் ஒரே இந்தியா, வளர்ச்சிக்கான இந்தியா என்பதே ஆகும் என பதிவிட்டுள்ளார்.

    இதேபோல், மற்றொரு டுவிட்டர் பதிவில், ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது இந்திய மக்களுக்கு தெரியும். ஆனால் வெளிநாட்டினருக்கு உண்மையில் ராகுல் காந்தி ஒரு பப்பு என்பது தெரியாது. அவரது முட்டாள்தன பேச்சுகளுக்கு எதிர்வினையாற்ற வேண்டும் என்பதும் அவசியமில்லை. ஆனால் சிக்கல் என்னவென்றால், அவரது இந்திய எதிர்ப்பு பேச்சுகள், இந்தியாவின் மீதுள்ள பொதுவான எண்ணத்திற்கு களங்கம் உண்டாக்கும் வகையில் இந்தியாவுக்கு எதிரான சக்திகளால் தவறாக பயன்படுத்தப்படுகிறது என தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×