என் மலர்
இந்தியா

தெலுங்கானாவில் இன்று மாலை 40 ஆயிரம் தொண்டர்கள் மத்தியில் உரையாற்றும் கார்கே
- காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்காக நாடு தழுவிய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது.
- கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது.
ஐதராபாத்:
காங்கிரஸ் கட்சியின் அடித்தளத்தை பலப்படுத்துவதற்காக நாடு தழுவிய பிரசார இயக்கம் தொடங்கப்பட்டுள்ளது. முதல் முறையாக தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் உள்ள எல்.பி. மைதானத்தில் இன்று மாலை கூட்டம் நடைபெறுகிறது. இதில் அகில இந்திய காங்கிரஸ் கட்சி தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கலந்து கொண்டு ஆலோசனைகள் வழங்குகிறார்.
இந்த கூட்டத்தில் கிட்டத்தட்ட 40,000 காங்கிரஸ் கட்சி தொண்டர்கள் பங்கேற்கின்றனர். இதில் கிராம அளவில் காங்கிரஸ் கட்சியை வலுப்படுத்துவது குறித்து ஆலோசனைகள் வழங்கப்படுகிறது. நேற்று தெலுங்கானா மாநில எம்.எல்.ஏ.க்கள் சிலர் மல்லிகார்ஜுன கார்கேவை சந்தித்தனர். அப்போது விரிவாக்கம் செய்யப்பட உள்ள அமைச்சரவையில் தங்களுக்கு இடம் வேண்டும் என கேட்டு அடம் பிடித்தனர். இதற்கு மல்லிகார்ஜுன கார்கே எந்த விதமான பதிலும் அளிக்கவில்லை. இது தெலுங்கானாவில் பரபரப்பை ஏற்படுத்தியது.