என் மலர்
இந்தியா

மும்பை போலீஸ் என மிரட்டி ரூ.93 லட்சம் மோசடி-கேரள வாலிபர் கைது
- போலீஸ் அதிகாரி என கூறியதோடு, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
- பெண்ணை மிரட்டி பல வங்கி கணக்குகள் மூலம் ரூ.93 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
திருவனந்தபுரம்:
கேரள மாநிலத்தை சேர்ந்த பெண் ஒருவருக்கு செல்போன் அழைப்பு வந்துள்ளது. அதில் பேசியவர், தன்னை மும்பை குற்றப்பிரிவு போலீஸ் அதிகாரி என கூறியதோடு, உங்கள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. விரைவில் நீங்கள் கைது செய்யப்படுவீர்கள் என தெரிவித்துள்ளார்.
தொடர்ந்து வேறு வேறு எண்களில் அந்த நபர் தொடர்பு கொண்டதால், அந்தப் பெண் பீதி அடைந்துள்ளார். இதனை தனக்கு சாதகமாக பயன்படுத்திக் கொண்ட மர்ம நபர், அந்தப் பெண்ணை மிரட்டி பல வங்கி கணக்குகள் மூலம் ரூ.93 லட்சம் பெற்று மோசடி செய்துள்ளார்.
இதுகுறித்து அந்தப் பெண் கொடுத்த புகாரின் பேரில் மலப்புரம் சைபர் கிரைம் போலீசார் விசாரணை நடத்தி கோட்டயம் தலப்பாலம் பகுதியை சேர்ந்த ஆல்பின் ஜானி (வயது 34) என்பவரை கைது செய்தனர்.
Next Story






