என் மலர்tooltip icon

    இந்தியா

    வேலையை ராஜினாமா செய்ய சென்றபோது பரிதாபம் - விமான விபத்தில் கேரள நர்சு உயிரிழப்பு
    X

    வேலையை ராஜினாமா செய்ய சென்றபோது பரிதாபம் - விமான விபத்தில் கேரள நர்சு உயிரிழப்பு

    • கடந்த ஓராண்டுக்கு முன்பு லண்டனில் நர்சாக பணியில் சேர்ந்தார்.
    • ரஞ்சிதாவுக்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கோழஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது.

    திருவனந்தபுரம்:

    கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம் கோழஞ்சேரி புல்லாடு பகுதியை சேர்ந்தவர் ரஞ்சிதா நாயர் (வயது39). இவர் ஓமனில் 9 ஆண்டுகள் நர்சாக பணி செய்து வந்தார். பின்னர் கடந்த ஓராண்டுக்கு முன்பு லண்டனில் நர்சாக பணியில் சேர்ந்தார்.

    இந்தநிலையில் ரஞ்சிதாவுக்கு கேரள அரசு பணியாளர் தேர்வாணயம் மூலம் கோழஞ்சேரி அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்தது. இதற்காக கேரளா வந்த அவர் லண்டனில் பணியாற்றிய ஆஸ்பத்திரிக்கு சென்று ராஜினாமா கடிதம் கொடுக்க முடிவு செய்தார்.

    இதற்காக அவர் அகமதாபாத்தில் இருந்து லண்டனுக்கு விமானத்தில் சென்றபோது விபத்தில் சிக்கி பலியானார். அரசு ஆஸ்பத்திரியில் வேலை கிடைத்த நிலையில் விமான விபத்தில் நர்சு பலியான சம்பவம் அவரது உறவினர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    Next Story
    ×