என் மலர்
இந்தியா

தீவிர வறுமையில் இருந்து கேரளா விடுபட்டதாக பினராயி விஜயன் அறிவிப்பு: மோசடி என எதிர்க்கட்சி விமர்சனம்
- சட்டசபை 300 விதியின் கீழ், பினராயி விஜயனின் அறிக்கை முற்றிலும் மோசடி.
- இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியாது. முற்றிலும் வெளிநடப்பு செய்கிறோம்.
கேரளா பைரவி அல்லது கேரள மாநிலம் உருவான நாளைத் தொடர்ந்து, இன்று அம்மாநில சிறப்பு சட்டசபை கூட்டம் நடைபெற்றது. சிறப்பு சட்டசபையில் பேசிய அம்மாநில முதல்வர் பினராயி விஜயன் "கேரள மாநிலம் தீவிர வறுமையில் இருந்து விடுபட்டுள்ளது" என அறிவித்தார்.
இதற்கு காங்கிரஸ் தலைமையிலான எதிர்க்கட்சி கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. அத்துடன் பினராயி விஜயன் அறிவிப்பு ஒரு மோசடி என சட்டசபையில் இருந்து எதிர்க்கட்சியின் வெளியேறினர்.
காங்கிரஸ் தலைமையிலான UDF "பினராயி விஜய் கூறுவது மோசடி. சட்டசபையை புறக்கணிக்கிறோம் எனத் தெரிவித்துள்ளது. எதிர்க்கட்சி தலைவர் வி.டி. சதீசன் "சட்டசபை 300 விதியின் கீழ், பினராயி விஜயனின் அறிக்கை முற்றிலும் மோசடி. சட்டசபை விதியை அவமதிப்பதாகும். இதனால் சிறப்பு சட்டசபை கூட்டத்தில் எங்களால் பங்கேற்க முடியாது. முற்றிலும் வெளிநடப்பு செய்கிறோம்" எனத் தெரிவித்துள்ளார்.
மோசடி எனச் சொல்வது அவர்களுடைய பழக்கம். எங்களால் அமல்படுத்த முடியும் என்பதை மட்டுமே சொல்கிறோம். நாங்கள் சொன்னை அமல்படுத்தியுள்ளோம். இதுதான் எதிர்க்கட்சி தலைவருக்கான பதில் என பினராயி விஜய் தெரிவித்துள்ளார்.






