என் மலர்
இந்தியா

VIDEO: 2 கார்களுக்கு இடையே சிக்கிய ஸ்கூட்டர் - தூக்கி வீசப்பட்ட நபர் உயிர்பிழைத்த அதிசயம்
- வீடியோ காட்சிகள் சமூக லவைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.
- வீடியோவை பார்த்த பயனர்கள், சாலை மோசமான நிலையில் உள்ளதாலேயே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர்.
இன்றைய காலக்கட்டத்தில் சாலைகளில் பயணிப்போர் தினந்தோறும் போக்குவரத்து நெரிசல், குண்டு குழியுமான சாலை, விபத்து போன்றவற்றை காண நேரிடுகிறது. நாம் எவ்வளவுதான் கவனமாக சென்றாலும் நமக்கு முன்னாலும், பின்னாலும் வருபவர்களால் விபத்தில் சிக்கும் சம்பவங்கள் பலருக்கும் நிகழ்ந்திருக்கும்.
அந்த வகையில், தற்போது சமூக வலைத்தளங்களில் பரவும் ஒரு வீடியோ காண்போரின் ஹார்ட் பீட்டை எகிற வைக்கிறது.
கேரளா மாநிலம் கண்ணூரில் சாலையில் பள்ளம் இருந்ததால் முன்னால் சென்று கொண்டு இருந்த கார் நின்றதால், பின்னால் ஸ்கூட்டரில் வந்த நபரும் நிறுத்தினார். இதனை தொடர்ந்து பின்னால் வந்த கார் நின்றிருந்த ஸ்கூட்டர் மீது மோதியதில் இருசக்கர வாகனத்தில் இருந்த நபர் தூக்கி வீசப்பட்டார். இதில் அந்நபர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார். இருப்பினும் இரு சக்கர வாகனம் சேதம் அடைந்தது.
இதுதொடர்பான வீடியோ காட்சிகள் சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது. வீடியோவை பார்த்த பயனர்கள், சாலை மோசமான நிலையில் உள்ளதாலேயே இதுபோன்ற விபத்துகள் ஏற்படுவதாக குற்றம்சாட்டினர்.






