என் மலர்
இந்தியா
கர்நாடக துணை முதல்வர் டி.கே. சிவகுமார் இடைத்தேர்லில் போட்டி?
- எச்.டி.குமாரசாமி மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டதை தொடர்ந்து சன்னபட்னா தொகுதிக்கு இடைத்தேர்தல்.
- சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
கர்நாடக மாநிலம் ராமாநகரா மாவட்டத்தில் உள்ள சன்னபட்னா தொகுதியின் பிரதிநிதியான ஜேடி(எஸ்) தலைவரும், மத்திய அமைச்சருமான எச்.டி.குமாரசாமி, சமீபத்தில் நடத்த பாராளுமன்ற தேர்தலில் வெற்றிப்பெற்று மக்களவை எம்.பியாக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இதைத் தொடர்ந்து, சன்னபட்னா தொகுதி காலியானது. இதனால், அந்த தொகுதிக்கு விரைவில் இடைத்தேர்தல் நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இருப்பினும், இந்த சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அட்டவணையை தேர்தல் ஆணையம் இன்னும் அறிவிக்கவில்லை.
இந்நிலையில், சன்னபட்னா இடைத்தேர்தலில் கர்நாடக மாநில துணை முதல்வர் டி.கே. சிவக்குமார் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதுகுறித்து, கருத்து தெரிவித்த துணை முதல்வர் டி.கே சிவக்குமார், " கர்நாடகா மாநிலத்தில் உள்ள சன்னபட்னா சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பை மறுக்கவில்லை. கட்சி மற்றும் வாக்காளர்களின் முடிவுக்கு கட்டுப்படுவேன்" என்றார்.
மேலும் அவர், "என்னுடைய இதயத்தில் சன்னபட்னா தொகுதி எப்போதும் உள்ளது. எனக்கு அரசியல் பிறப்பைக் கொடுத்த இடம் சன்னபட்னா தான்.
எனது சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட சன்னப்பட்னா தொகுதியில் நான் நான்கு முறை வெற்றி பெற்றுள்ளேன். அங்குள்ள மக்கள் என்னை ஆசீர்வதித்துள்ளனர்.
சன்னபட்னாவும் முன்பு சாத்தனூரில் ஒரு பகுதியாக இருந்தது (சிவகுமார் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட பழைய பகுதி). நான் சன்னபட்னாவை விரும்புகிறேன். நான் சன்னபட்னாவுக்கு உதவ விரும்புகிறேன். நான் சன்னபட்னாவை மாற்ற விரும்புகிறேன்.
இக்கட்டான காலத்திலும் சன்னப்பட்டின மக்கள் எங்களுக்கு சுமார் 80,000 வாக்குகளை (சமீபத்திய மக்களவைத் தேர்தலில்) அளித்துள்ளனர்.
அங்கு மாற்றத்தை கொண்டு வந்து அங்குள்ள மக்களுக்கு நான் செலுத்த வேண்டிய கடனை அடைக்க வேண்டும். கனகபுரத்தில் நான் செய்ததை விட அதிக வளர்ச்சியை அங்கு செய்ய வாய்ப்பு உள்ளது" என்றார்.
அவரது சகோதரரும், முன்னாள் எம்.பி.யுமான டி.கே.சுரேஷ், சன்னப்பட்டனத தொகுதியில் போட்டியிடுவாரா என்ற கேள்விக்கு, "அது குறித்து முடிவு செய்யப்படவில்லை. எது எப்படியோ ஆனால் எனக்கே ஓட்டு கேட்கிறேன்" என்றார்.
சமீபத்தில் நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பெங்களூரு ஊரக மக்களவைத் தொகுதியில் போட்டியிட்டு தோல்வியடைந்த சுரேஷ், சன்னபட்னாவில் களமிறக்கப்படலாம் என்று முன்னதாகவே பேசப்பட்டாலும், அவரை பழிவாங்க சிவக்குமார் களத்தில் இறங்கலாம் என்ற யூகங்கள் தற்போது அரசியல் வட்டாரத்தில் குறிப்பாக பெரும் கட்சியினரிடையே பரவி வருகிறது.
சிவக்குமார் சன்னபட்னா தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றால், அவர் தற்போது பிரதிநிதித்துவப்படுத்தும் கனகபுரா சட்டமன்றத் தொகுதியை சுரேஷுக்காக விட்டுக்கொடுப்பார் என்று கூறப்படுகிறது.