என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
    X

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

    • வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
    • ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    Live Updates

    • 13 May 2023 12:10 PM IST

      சித்தராமையா மற்றும் டி.கே.சிவக்குமார் இடையே கடும் போட்டியில் உள்ளனர். சித்தராமையா தான் முதல்வராக வேண்டும் என அவரது ஆதரவாளர்கள் வலியுறுத்தி வருகின்றனர்.

      டி.கே.சிவக்குமார் முதல்வராக வேண்டும் என கர்நாடக காங்கிரஸ் அலுவலகம் முன் அவரது ஆதரவாளர்கள் கோஷம் எழுப்பி வருகின்றனர்.

    • 13 May 2023 12:10 PM IST

      கர்நாடகாவில் வெற்றி முகத்தில் காங்கிரஸ் உள்ள நிலையில், முதல்வர் யார் என்பதில் போட்டா போட்டி நிலவி வருகிறது.

    • 13 May 2023 11:52 AM IST

      கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ள நிலையில், மூத்த தலைவர்கள் சித்தராமையா, டி.கே.சிவக்குமார், ரஞ்சித் சிங் வாலா ஆலோசனை நடத்தவுள்ளனர்.

    • 13 May 2023 11:44 AM IST

      சென்னாபட்னா தொகுதியில் போட்டியிட்ட ம.ஜ.த தலைவர் குமாரசாமி பின்னடைவில் இருந்த நிலையில், தற்போது முன்னிலையில் உள்ளார். ராமநகரா தொகுதியில் குமாரசாமியின் மகன் நிகில் பின்னடைவில் உள்ளார்.

    • 13 May 2023 11:10 AM IST

      கர்நாடக சட்டசபை தேர்தலில் அதிக இடங்களில் காங்கிரஸ் வெற்றி பெற்று முன்னிலையில் உள்ளது. இதனால், சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசு வெடித்து கொண்டாடி வருகின்றனர்.

    • 13 May 2023 11:04 AM IST

      கர்நாடக தேர்தல் வாக்கு எண்ணிக்கை நிலவரப்படி, காங்கிரஸ் கட்சி பெரும்பான்மையை கடந்து வெற்றி பாதையில் உள்ளது. இதை கொண்டாடும் விதமாக, கட்சி நிர்வாகிகள் கர்நாடக காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவகுமாரின் பெங்களூரு இல்லத்திற்கு வெளியே இனிப்புகளை பகிர்ந்து வருகின்றனர்.

    • 13 May 2023 10:33 AM IST

      ஹூப்ளி- தர்வாட் மத்திய சட்டசபை தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளர் ஜெகதீஷ் ஷெட்டர் பின்தங்கியுள்ளார். முன்னாள் முதல்வரான ஷெட்டர், சீட் மறுக்கப்பட்டதால் பாரதிய ஜனதா கட்சியில் இருந்து விலகி சமீபத்தில் காங்கிரசில் சேர்ந்தார்.

    • 13 May 2023 10:25 AM IST

      கர்நாடகாவில் வாக்குகள் எண்ணப்பட்டு வரும் நிலையில், காங்கிரஸ் தலைவர் பிரியங்கா காந்தி இன்று காலை சிம்லாவில் உள்ள கோவிலுக்கு சென்று வழிபட்டார்.

    • 13 May 2023 10:13 AM IST

      காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன் பிரியங்க் கார்கே சித்தப்பூரில் பாஜகவின் மணிகண்ட ரத்தோடை எதிர்த்து 2,493 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ளார்.

    • 13 May 2023 10:08 AM IST

      காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பவன் கேரா கூறுகையில்,"பெரும்பான்மையுடன் நாங்கள் ஆட்சி அமைப்போம், அதில் எந்த சந்தேகமும் இல்லை. பிரதமரின் எதிர்மறையான, பிளவுபடுத்தும் பிரச்சாரம் பலனளிக்கவில்லை" என்றார்.

    Next Story
    ×