என் மலர்tooltip icon

    இந்தியா

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்
    X

    கர்நாடக சட்டசபை தேர்தல் முடிவுகள் லைவ் அப்டேட்ஸ்: ஆட்சியை பிடிக்கிறது காங்கிரஸ்

    • வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது.
    • ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    கர்நாடக மாநிலத்தில் கடந்த 10ம் தேதி நடைபெற்ற சட்டசபை தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை இன்று காலை தொடங்கியது.

    பெங்களூருவில் உள்ள 28 தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை 6 மையங்களிலும், மற்ற தொகுதிகளுக்கான ஓட்டு எண்ணிக்கை மாநிலத்தில் உள்ள 30 வாக்கு எண்ணும் மையங்களிலும் நடைபெற்று வருகிறது. ஒட்டுமொத்தமாக மாநிலம் முழுவதும் 36 மையங்களில் ஓட்டு எண்ணிக்கை நடைபெறுகிறது.

    காலை 8 மணிக்கு ஓட்டு எண்ணிக்கை தொடங்கிய நிலையில், மதியம் 2 மணிக்குள் பெரும்பாலான தொகுதிகளின் முடிவுகள் வெளியாகிவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    வாக்குப்பதிவின் போது 73.19 சதவீத ஓட்டுகள் பதிவாகி இருந்தது. இந்நிலையில், இன்றைய வாக்கு எண்ணிக்கையின் முடிவில் கர்நாடகாவில் ஆட்சியை பிடிக்கப்போவது யார் என்பது தெரிந்துவிடும்.

    Live Updates

    • 13 May 2023 1:20 PM IST

      காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜூனா கார்கே செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், " சட்டசபை குழு கூட்டத்தை முடிக்கும் வரை அனைத்து வேட்பாளர்களையும் பெங்களூருக்கு வருமாறு கூறியுள்ளோம். காங்கிரசின் உழைப்பிற்கு மக்கள் நல்ல தீர்ப்பை வழங்கியுள்ளனர்.

      முந்தைய அரசு எந்தளவுக்கு திறமையற்றதாக இருந்தது என்பதை இந்த முடிவுகள் காட்டுகின்றன. வென்றாலும், தோற்றாலும் கட்சி மக்களுடன் இருக்க வேண்டும்.

      எப்படி எதிர்வினையாற்றுவது என்பது பற்றி வேட்பாளர்களுக்கு விளக்குவோம். வெற்றி பெற்றவர்களை வாழ்த்துகிறேன். தோல்வியடைந்தவர்களின் பணியை பாராட்டுவேன்" என்று உருக்கமாக பேசினார்.

    • 13 May 2023 1:12 PM IST

      காங்கிரஸ் வெற்றி குறித்து சித்தராமையா கூறுகையில்," பிரதமர் மோடி வந்தாலும் எதுவும் நடக்காது என்று சொன்னோம். அது உண்மையாகிவிட்டது. நாங்கள் 120 இடங்களில் முன்னிலையில் இருக்கிறோம். நாங்கள் எதிர்பார்த்தபடி தனிப்பெரும்பான்மை பெறுவோம்" என்றார்.

    • 13 May 2023 1:09 PM IST

      கர்நாடக மாநில காங்கிரஸ் தலைவர் டி.கே.சிவக்குமார், "வெற்றிக்கு, காங்கிரஸ் தொண்டர்கள் மற்றும் மக்கள் தான் காரணம். முதல்வர் போட்டியில் உள்ள சித்தராமையா உள்ளிட்டோருக்கு நன்றி. வெற்றியை தந்நத மக்களின் பாதத்தை தொட்டு வணங்குகிறேன்" என கண்ணீர் மல்க பேட்டி அளித்துள்ளார்.

    • 13 May 2023 1:08 PM IST

      காங்கிரஸ் முன்னிலை குறித்து, கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மை கூறுகையில், "எங்களால் பெரும்பான்மையை எட்ட முடியவில்லை. முழுமையாக முடிவுகள் வந்தவுடன் விரிவாக ஆய்வு செய்வோம். தேசியக் கட்சி என்ற முறையில் ஆராய்வது மட்டுமின்றி, தவறுகளை திருத்திக் கொண்டு மீண்டும் கட்சியை பலப்படுத்துவோம். பாராளுமன்றத் தேர்தலில் சிறப்பாக செயல்படுவோம்." என்றார்.

    • 13 May 2023 1:03 PM IST

      காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ள நிலையில், சித்தராமையாவுக்கு தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

    • 13 May 2023 12:56 PM IST

      காங்கிரஸ் முன்னிலை குறித்து கர்நாடகா அமைச்சர் சி.என்.அஸ்வத் நாராயணன் கூறுகையில், "தற்போது மக்கள் தீர்ப்பு காங்கிரசுக்கு சாதகமாக உள்ளது. இந்த முடிவைப் பார்க்கும்போது மிகவும் ஆச்சரியமாக இருக்கிறது. கர்நாடகாவில் பாஜக சிறப்பாக செயல்பட்டது. இருப்பினும் மக்கள் தீர்ப்பை ஏற்க வேண்டும். பாஜகவின் பின்னடைவுக்கான காரணிகளை ஆராய்வோம். பின்னர் ஆலோசித்து விவாதிப்போம்" என்றார்.

    • 13 May 2023 12:52 PM IST

      கர்நாடகா சட்டசபை தேர்தலில் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வரும் நிலையில், தற்போதைய நிலவரப்படி காங்கிரஸ் 129 தொகுதிகளில் முன்னிலையில் உள்ளது. தொடர்ந்து, பாஜக 66 தொகுதிகளிலும், மஜத 22 தொகுதிகளிலும், மற்றவை 7 தொகுதிகளிலும் முன்னிலையில் உள்ளன.

    • 13 May 2023 12:30 PM IST

      கர்நாடகாவில் ஷிகோன் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றுள்ளார்.

    • 13 May 2023 12:30 PM IST

      கர்நாடகாவில் ஷிகோன் தொகுதியில் முதல்வர் பசவராஜ் பொம்மை வெற்றி பெற்றுள்ளார்.

    • 13 May 2023 12:16 PM IST

      கர்நாடகாவில் காங்கிரஸ் வெற்றி முகத்தில் உள்ள நிலையில், நாளை எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது. வெற்றி பெறும் எம்.எல்.ஏக்கள் இன்றிரவே பெங்களூரு வர கர்நாடகா காங்கிரஸ் தலைமை உத்தரவிட்டுள்ளது.

      வெற்றிபெறும் எம்.எல்.ஏக்களை விடுதிகளில் தங்க வைக்கவும் திட்டமிடப்பட்டுள்ளது.

    Next Story
    ×