என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வில் இணைந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.
    X

    ஜார்க்கண்ட் சட்டசபை தேர்தல்: பா.ஜ.க.வில் இணைந்த ஆளுங்கட்சி எம்.எல்.ஏ.

    • ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வுக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கவில்லை.
    • ஆளும் கட்சி எம்.எல்.ஏ.வான அவர் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    ராஞ்சி:

    ஜார்க்கண்ட் மாநிலத்தில் மொத்தமுள்ள 81 சட்டசபை தொகுதிகளுக்கு 2 கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. 43 தொகுதிகளுக்கு முதல் கட்ட தேர்தல் நேற்று நடைபெற்றது. இதில் 65 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளன.

    இரண்டாம் கட்ட தேர்தல் வரும் 20-ம் தேதி நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் 23-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன.

    அங்கு ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா தலைமையிலான கூட்டணி ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டணியில் காங்கிரஸ், ராஷ்டிரீய ஜனதா தளம் ஆகிய கட்சிகள் உள்ளன.

    இதற்கிடையே, அம்மாநிலத்தின் பகூர் மாவட்டம் லிதிபரா தொகுதி எம்.எல்.ஏ.வாக ஆளும் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியை சேர்ந்த தினேஷ் வில்லியம்ஸ் மராண்டி செயல்பட்டு வந்தார். அவருக்கு இந்த தேர்தலில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படவில்லை.

    இந்நிலையில், தேர்தலில் வாய்ப்பு வழங்கப்படாததால் ஆளும் கட்சி எம்.எல்.ஏ. தினேஷ் வில்லியம்ஸ் ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சியில் இருந்து விலகி பா.ஜ.க.வில் நேற்று இணைந்தார்.

    லிதிபரா தொகுதியில் தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டிருந்த பா.ஜ.க. மூத்த தலைவரும் மத்திய மந்திரியுமான சிவராஜ் சிங் சவுகான் முன்னிலையில் தினேஷ் பா.ஜ.க.வில் இணைந்தார்.

    பா.ஜ.க.வில் இணைந்துள்ள தினேஷுக்கு நடப்பு தேர்தலில் லிதிபரா தொகுதியில் போட்டியிட வாய்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

    Next Story
    ×