search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    தேர்தலுக்காக பாஜக கொண்டுள்ள ஒரே ஆயுதம் பிரித்தாளும் கொள்கை- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்
    X

    தேர்தலுக்காக பாஜக கொண்டுள்ள ஒரே ஆயுதம் பிரித்தாளும் கொள்கை- ஜெய்ராம் ரமேஷ் விமர்சனம்

    • சிஏஏ-வுக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். ஏனென்றால் அரசமைப்புக்கு எதிராக மதம் சார்ந்து குடியுரிமை வழங்குகிறது.
    • அவர்கள் 4 வருடம், 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்?.

    மத்திய உள்துறை மந்திரி அமித் ஷா, மக்களை தேர்தலுக்கு முன்னதாக இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டிருந்தார்.

    இந்த நிலையில்தான் நேற்றுமுன்தினம் அரசிதழில் அறிவிப்பு வெளியிட்டு, உடனடியாக அமல்படுத்தப்படுவதாக தெரிவித்தது. நேற்று இந்திய குடியுரிமை வேண்டி விண்ணப்பம் செய்யலாம் என அதற்கான இணையதள பக்கத்தையும் உருவாக்கியது.

    மத்திய அரசின் இந்த செயலுக்கு நாடு முழுவதும் உள்ள எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவிதுள்ளது. தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்காளம் மாநிலங்கள் செயல்படுத்தமாட்டோம் என அறிவித்துள்ளது.

    இந்திய குடியுரிமை திருத்தச் சட்டம் அமல்படுத்தப்பட்டது குறித்து காங்கிரஸ் தலைவர் ஜெய்ராம் ரமேஷ் கூறியதாவது:-

    தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்காள மாநில அரசுகள் சிஏஏ-வை செயல்படுத்தப்பட்டாம் என அறிவித்துள்ளன. சிஏஏ-வுக்கு எதிராக நாங்கள் இருக்கிறோம். ஏனென்றால் அரசமைப்புக்கு எதிராக மதம் சார்ந்து குடியுரிமை வழங்குகிறது. இதற்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. அவர்கள் 4 வருடம், 3 மாதங்கள் எடுத்துக் கொண்டது ஏன்?.

    நாங்கள் விவசாயிகள், இளைஞர்கள், பெண்கள் மற்றும் தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து நாங்கள் குரல் எழுப்பி வருகிறோம். பா.ஜனதாவின் பிரச்சனை என்ன?. பிரதமர் மோடியுடைய பிரச்சனை என்ன? 10 வருட அநீதி பற்றி பிரதமர் மோடி பேசவில்லை. இந்த தேர்தலுக்காக பா.ஜனதா ஒரே ஆயுதம் கொண்டுள்ளது. அது பிரித்தாளும் கொள்கை. சிஏஏ-யின் விதிமுறை 4 வருடம், 3 மாதங்களுக்குப் பிறகு உருவாக்கப்பட்டுள்ளது. தேர்தலுக்கு இன்னும் ஒருமாத காலமே இருக்கும் நிலையில், பிரித்தாளும் கொள்கைக்கு ஒரு டோஸ் கொடுக்கிறார்கள்" என்றார்.

    Next Story
    ×