என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி!
    X

    ஜகதீப் தன்கர் மருத்துவமனையில் அனுமதி!

    • சனிக்கிழமை இரண்டுமுறை மயக்கமடைந்தார்.
    • கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி, உடல்நலக் காரணங்களைக் கூறி, துணைத் தலைவர் பதவியிலிருந்து தன்கர் ராஜினாமா செய்தார்.

    இந்தியாவின் முன்னாள் துணைக் குடியரசுத் தலைவர் ஜகதீப் தன்கர், இரண்டு முறை சுயநினைவை இழந்ததால், டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. கடந்த சனிக்கிழமையன்று கழிவறைக்கு சென்றபோது தன்கருக்கு இரண்டுமுறை மயக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.

    பின்னர் மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டுள்ளார். தொடர்ந்து மேல் பரிசோதனைக்காக அவரை அங்கேயே அனுமதிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தியதாக கூறப்படுகிறது. அதனைத்தொடர்ந்து இன்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

    ஆனால் இதுகுறித்து தன்கர் தரப்பிலிருந்தோ, அவரது குடும்பத்தினரிடமிருந்தோ இதுவரை எந்த அதிகாரப்பூர்வ அறிக்கையும் வெளியிடப்படவில்லை. கடந்த ஆண்டு ஜூலை 21 ஆம் தேதி, உடல்நலக் காரணங்களைக் கூறி, துணைத் தலைவர் பதவியிலிருந்து தன்கர் ராஜினாமா செய்தார். ஆனால் திடீரென வெளியான இந்த செய்தி பல யூகங்களுக்கு வழிவகுத்தது.

    Next Story
    ×