search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடாதது ஏன்?- பா.ஜனதா விளக்கம்
    X

    காஷ்மீரில் உள்ள 3 தொகுதிகளில் போட்டியிடாதது ஏன்?- பா.ஜனதா விளக்கம்

    • சில நேரங்களில் சொந்த நலனை புறந்தள்ளிவிட்டு மிகப்பெரிய இலக்கை அடைவதற்கான மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகிறது.
    • நாங்கள் தேசப்பற்று, காஷ்மீர் முன்னேற்றத்திற்கு, அமைதியை வலுப்படுத்துதல், சகோதரதத்துவம், சமூகத்திற்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்.

    ஜம்மு-காஷ்மீரில் மொத்தம் ஐந்து மக்களவை தொகுதிகள் உள்ளன. உதம்பூர், ஜம்மு ஆகியவை ஜம்முவில் உள்ளன. காஷ்மீரில் உள்ள அனந்த்நாக்-ரஜோரி, ஸ்ரீநகர், பாரமுல்லா ஆகிய தொகுதிகளில் பா.ஜனதா போட்டியிடுவதில்லை.

    இந்த நிலையில் காஷ்மீரில் உள்ள தொகுதியில் ஏன் போட்டியிடவில்லை என்பதை பா.ஜனதா நியாயப்படுத்தியுள்ளது.

    இது தொடர்பாக காஷ்மீர் மாநில பா.ஜனதா தலைவர் ரவீந்தர் ரெய்னா கூறுகையில் "காஷ்மீரில் உள்ள மூன்று தொகுதிகளிலும் எங்களுடைய சொந்த பலத்தில் போட்டியிட விரும்புகிறோம். ஆனால் சில நேரங்களில் சொந்த நலனை புறந்தள்ளிவிட்டு மிகப்பெரிய இலக்கை அடைவதற்கான மாறுபட்ட முடிவுகள் எடுக்கப்படுகிறது.

    நாங்கள் தேசப்பற்று, காஷ்மீர் முன்னேற்றத்திற்கு, அமைதியை வலுப்படுத்துதல், சகோதரதத்துவம், சமூகத்திற்கு சேவை செய்ய ஆர்வமாக உள்ள கட்சிகளுக்கு ஆதரவு அளிப்போம்" என்றார்.

    மேலும், இந்த மூன்று தொகுதிகளில் மக்கள் காங்கிரஸ், தேசிய மாநாடு, பிடிபி ஆகிய கட்சிகளை புறக்கணிக்க வேண்டும். இங்கு யாரை ஆதரிப்பது என்பது குறித்து மூத்த தலைவர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×