search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: அக்டோபர் 18 வரை ஏர் இந்தியா சேவை ரத்து
    X

    இஸ்ரேல்-ஹமாஸ் போர் எதிரொலி: அக்டோபர் 18 வரை ஏர் இந்தியா சேவை ரத்து

    • இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகின்றனர்.
    • ஏர் இந்தியா விமானம் தனது சேவையை அக்டோபர் 18ம் தேதி வரை நிறுத்தி வைத்துள்ளது

    புதுடெல்லி:

    இஸ்ரேல் மீது ஹமாஸ் பயங்கரவாதிகள் கடந்த 7ம் தேதி திடீர் தாக்குதல் நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில் இஸ்ரேல் காசா மீது தாக்குதலை நடத்தி வருகிறது. இதனால் இரு பக்கமும் பலத்த உயிர்ச்சேதம் ஏற்பட்டுள்ளது.

    நேற்றைய 7-வது நாள் தாக்குதலுக்குப் பிறகு இருதரப்பிலும் பலி எண்ணிக்கை 3 ஆயிரத்தை தாண்டியுள்ளது.

    இதற்கிடையே, இஸ்ரேலில் சிக்கியுள்ள இந்தியர்களை தாய்நாட்டுக்கு பத்திரமாக அழைத்து வருவதற்காக ஆபரேஷன் அஜய் என்ற திட்டத்தை மத்திய அரசு அறிவித்தது. அதன்படி, இஸ்ரேல் நாட்டில் சிக்கித் தவித்த இந்தியர்களை தனி விமானம் மூலம் அழைத்து வருகின்றனர்.

    இந்நிலையில், இஸ்ரேல்-ஹமாஸ் போர் காரணமாக அனைத்து விமான சேவைகளையும் அக்டோபர் 18-ம் தேதி வரை ரத்து செய்துள்ளோம் என ஏர் இந்தியா அறிவித்துள்ளது.

    Next Story
    ×