என் மலர்tooltip icon

    இந்தியா

    ஆபரேஷன் சிந்தூர்: அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் இந்திய படைகளை ஒப்பிட்ட ராஜ்நாத் சிங்
    X

    ஆபரேஷன் சிந்தூர்: அறுவை சிகிச்சை நிபுணர்களுடன் இந்திய படைகளை ஒப்பிட்ட ராஜ்நாத் சிங்

    • பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாத முகாம்களை இந்தியா துல்லியமாக தாக்கியது.
    • 9 பயங்கரவாத முகாம்களை அழித்தது இந்தியா ராணுவம் தெரிவித்தது.

    பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு இந்தியா ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கையை மேற்கொண்டது. இந்தியாவின் முப்படைகளும் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பயங்கரவாதிகளின் 9 முகாம்களை துல்லியமாக தாக்கி அழித்தது.

    பொதுமக்களுக்கு பாதிப்பு ஏதும் இல்லாமல் இந்தியாவின் முப்படைகளும் துல்லியமாக தாக்குதல் நடத்தியதை நாட்டு மக்கள் பாராட்டி வருகின்றனர். இந்த நிலையில் திறமையான அறுவை சிகிச்சை நிபுணர்கள் போன்று இந்திய படைகள் ஆபரேஷன் சிந்தூரின்போது செயல்பட்டனர் என இந்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.

    உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள கே.என். நினைவு மருத்துவமனையின் 25ஆவது ஆண்டு விழா நிகழ்ச்சியில் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார். அப்போது ராஜ்நாத் சிங் கூறியதாவது:-

    நம்முடைய படைகள் நிபுணத்துவம் வாய்ந்த டாக்டர்கள் அல்லது அறுவை சிகிச்சையாளர்கள் போன்று செயல்பட்டன. அறுவை சிகிச்சையாளர்கள், நோய் உள்ள பகுதிகளில் துல்லியமாக கருவிகளை பயன்படுத்துவார்கள். இந்த படைகளில் அது போன்று பயன்படுத்தினர். ஈடுசெய்ய முடியாத துல்லியத்தோடு பயங்கரவாதத்தை வோரோடு அழிக்கும் வகையில் தாக்குதல் நடத்தினர்.

    மே 7ஆம் தேதி இந்திய ராணுவ நடவடிக்கையில் பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் உள்ள பல பயங்கரவாத தளங்கள் தாக்கப்பட்டது. டாக்டர்களும், வீரர்களும் நாட்டிற்கு முக்கியமான வகையில் சேவையாற்றுவார்கள். ஒருவர் சுகாதாரத்தை பாதுகாப்பது. மற்றொருவர் நாட்டின் பாதுகாப்பை பாதுகாப்பது.

    இவ்வாறு ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

    Next Story
    ×