search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஏஜென்சிகளை ஏன் கட்டுப்படுத்தக்கூடாது: கெஜ்ரிவால் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட எதிர்க்கட்சிகள்
    X

    ஏஜென்சிகளை ஏன் கட்டுப்படுத்தக்கூடாது: கெஜ்ரிவால் விவகாரத்தில் தேர்தல் ஆணையத்திடம் முறையிட்ட எதிர்க்கட்சிகள்

    • மத்திய அமைப்புகளை தேர்தல் ஆணையம் ஏன் கடுப்படுத்தக் கூடாது- சீதாராம் யெச்சூரி
    • தேர்தல் ஆணையத்திற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு போலீஸ் மூலம் களம் சமநிலை படுத்தப்படுகிறது- அபிஷேக் சிங்வி

    இந்திய பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான தேதி அறிவிக்கப்பட்டு மனுதாக்கல் தொடங்கிய நிலையில் அமலாக்கத்துறையால் டெல்லி மாநில முதல்வரும், ஆம் ஆத்மி கட்சியின் தேசிய ஒருங்கிணைப்பாளருமான அரவிந்த் கெஜ்ரிவால் கைது செய்யப்பட்டுள்ளார்.

    கெஜ்ரிவால் கைதுக்கு இந்தியா கூட்டணியில் உள்ள கட்சிகளின் தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் இன்று மாலை இந்திய தேர்தல் ஆணையத்தில் புகார் அளித்தனர்.

    புகார் அளித்தபின், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொது செயலாளர் சீதாராம் யெச்சூரி கூறுகையில் "பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கான நடைமுறைகள் தொடங்கிவிட்டன. தேர்தல் நடத்தை விதிகள் அமல்படுத்தப்பட்டுள்ளன. இருந்தபோதிலும் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்பட்டள்ளது.

    இது களத்தில் சமநிலை என்பது அழித்துவிடும். சம நிலை இல்லாமல் ஜனநாயகம் என்பது ஒன்றுமில்லை. காவல்துறை மற்றும் நிர்வாகத்தை தேர்தல் ஆணையம் கட்டுப்படுத்துகிறத. அப்புறம் மத்திய அமைப்புகளை தேர்தல் ஆணையம் ஏன் கடுப்படுத்தக் கூடாது. அவர்கள் இது தொடர்பாக யோசிக்க வேண்டும்" என்றார்.

    காங்கிரஸ் தலைவர் அபிஷேக் சிங்வி கூறுகையில் "ஏறக்குறைய அனைத்து எதிர்க்கட்சிகளும் இங்கே உள்ளன. டெல்லி முதல்வர் கைது செய்யப்பட்ட நிகழ்வு நேற்று நடைபெற்றது. நாங்கள் தேர்தல் ஆணையத்திடம் முழு விவரத்தையும் அளித்துள்ளோம். இது தனிநபர் அல்லது எந்த கட்சியையும் பற்றி என்பது கிடையாது, அரசியலமைப்பின் அடிப்படை அமைப்பு தொடர்பானது.

    தேர்தலில் சமநிலை தேவைப்படும்போது, ஏஜென்சிகளை தவறாக பயன்படுத்தி, நீங்கள் தேர்தல் களத்தை சமநிலைக்கு விடுவதில்லை. இது சுதந்திரம், நியாயமான மற்றும் ஜனநாயகத்தை பாதிக்கும். தேர்தல் ஆணையத்திற்கு பொறுப்பு கொடுக்கப்பட்டு போலீஸ் மூலம் களம் சமநிலை படுத்தப்படுகிறது. இந்த விவகாரத்தில் தேர்தல் ஆணையம் தலையிட வேண்டும் என கேட்கிறோம்.

    75 வருட சுதந்திர இந்தியாவில் முதன்முறையாக முதல்வராக இருக்கும் நபர் கைது செய்யப்பட்டுள்ளார். காங்கிரஸ் கட்சியின் அக்கவுண்ட் முடக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளுக்கு எதிராக மத்திய ஏஜென்சிகள் தவறாக பயன்படுத்தப்படுகிறது என்பதற்கான சாட்சிகளை கொடுத்துள்ளோம்" என்றார்.

    Next Story
    ×