என் மலர்
இந்தியா

சுவை மிகுந்த உணவு கிடைக்குமிடம்: டாப் 100 நகரங்களில் மும்பை, சென்னைக்கு எந்த இடம் தெரியுமா?
- சுவை மிகுந்த உணவு கிடைக்கும் உலகின் டாப் 100 நகரங்களின் பட்டியல் வெளியானது.
- இந்தப் பட்டியலில் மும்பை, சென்னை உள்பட 6 இந்திய நகரங்கள் இடம் பிடித்துள்ளன.
புதுடெல்லி:
டேஸ்ட் அட்லஸ் என்ற இணையதளம் உலகம் முழுவதும் உள்ள சிறந்த டிஷ் (உணவு வகைகள்), சிறந்த உணவு நகரங்கள், சிறந்த உணவு பொருட்கள், உணவுக்கு தேவையான சிறந்த பொருட்கள் போன்ற பல பிரிவுகளில் ஆய்வு செய்து பட்டியலை வெளியிட்டுள்ளது.
அந்த வகையில், இந்த இணையதளம் வெளியிட்டுள்ள சுவை மிகுந்த உணவு கிடைக்கும் இடங்களின் பட்டியல் இப்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.
உலகின் முன்னணி நகரங்கள் இடம் பெற்றுள்ள இந்த பட்டியலில், 6 இந்திய நகரங்கள் இடம் பெற்றுள்ளன. அவை பின்வருமாறு:
5வது இடம் - மும்பை: இங்கு வடை பாவ், பாவ் பாஜி மற்றும் பாம்பே பிரியாணி பிரபலம்.
43வது இடம் - அமிர்தசரஸ்: இங்கு அமிர்தசரி குல்சா (Amritsari Kulcha) பிரபலம்.
45வது இடம் - புதுடெல்லி: இங்கு சோலே பதுரே, நிஹாரி, பட்டர் சிக்கன் பிரபலம்.
50வது இடம் - ஐதராபாத்: இங்கு பிரியாணி பிரபலம்.
71வது இடம்- கொல்கத்தா: இங்கு ரசகுல்லா மிகவும் பிரபலம்.
75வது இடம்- சென்னை: இங்கு தோசைகள் மற்றும் இட்லிகள் மிகவும் பிரபலம்.
இத்தாலியின் நேபிள்ஸ், மிலன், போலோக்னா, புளோரன்ஸ், இந்தியாவின் மும்பை, இத்தாலியின் ரோம், பிரான்சின் பாரிஸ்,
ஆஸ்திரியாவின் வியன்னா, இத்தாலியின் டுரின், ஜப்பானின் ஒசாகா ஆகிய நகரங்கள் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ளது.