என் மலர்tooltip icon

    இந்தியா

    ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சு
    X

    ஓமன், குவைத், கத்தாா் நாட்டு தலைவா்களுடன் பிரதமர் மோடி பேச்சு

    • போரில் இந்த நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்தார்.
    • அங்கு வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தாா்.

    புதுடெல்லி:

    ஈரான் மீது அமெரிக்கா, இஸ்ரேல் கூட்டுப் படைகள் தீவிர தாக்குதல் நடத்தி வருகின்றன. அதைத் தொடா்ந்து, ஈரானும் பதில் தாக்குதலைத் தீவிரப்படுத்தியுள்ளது.

    குவைத், கத்தாா் உள்ளிட்ட வளைகுடா நடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் குறிவைத்தும், இஸ்ரேல் மீதும் ஈரான் பதில் தாக்குதல் நடத்தி வருகிறது.

    இதற்கிடையே, வளைகுடா நாடுகளில் இருக்கும் இந்தியா்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த அந்த நாடுகளின் தலைவா்களுடன் பிரதமா் மோடி கடந்த 3 நாளாக தொடா்ந்து பேசி வருகிறாா். பஹ்ரைன் மன்னா், சவுதி அரேபிய பட்டத்து இளவரசா் ஆகியோருடன் பிரதமா் மோடி தொலைபேசியில் ஆலோசனை மேற்கொண்டாா்.

    ஜோா்டான் மன்னா் இரண்டாம் அப்துல்லாவுடன் பேசிய பிரதமா் மோடி, அந்தப் பிராந்தியத்தில் நிலவும் சூழல் குறித்து கவலை தெரிவித்தாா். ஐக்கிய அரபு அமீரக அதிபா் ஷேக் முகமது பின் சையது அல் நஹ்யான் மற்றும் இஸ்ரேல் பிரதமா் பெஞ்சமின் நேதன்யாகு ஆகியோருடனும் பிரதமா் மோடி தொலைபேசி வழியில் பேசினாா்.

    இந்நிலையில், ஓமன் சுல்தான் ஹைதம் பின் தாரிக், குவைத் பட்டத்து இளவரசா் ஷேக் சபா அல்-காலித் அல்-ஹமத் மற்றும் கத்தாா் அமீா் ஷேக் தமிம் பின் ஹமத் அல் தானி ஆகியோருடன் பிரதமா் நரேந்திர மோடி தொலைபேசி மூலம் நேற்று பேசினாா்.

    அப்போது, போரில் இந்த நாடுகளின் மீது நடத்தப்படும் தாக்குதல்கள் குறித்து பிரதமா் மோடி கவலை தெரிவித்ததோடு, அந்த நாடுகளில் வசிக்கும் இந்திய சமூகத்தினரின் பாதுகாப்பு மற்றும் நலன்களை உறுதிப்படுத்துவது குறித்தும் ஆலோசித்தாா் என பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    Next Story
    ×