என் மலர்tooltip icon

    இந்தியா

    I QUIT: அறைக் கண்ணாடியில் Lipstick-இல் எழுதி வைத்து சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை
    X

    "I QUIT": அறைக் கண்ணாடியில் Lipstick-இல் எழுதி வைத்து சட்டக் கல்லூரி மாணவி தற்கொலை

    • சம்பவம் நடந்து அன்று காலை அவளை வீட்டிற்கு அழைத்தார்கள்.
    • முழு குடும்பமும் ஒரு அறையில் அடைத்து வைத்து அவளைத் தாக்கினர்.

    உத்தரபிரதேசத்தின் ஜான்சியில் 23 வயது சட்டக் கல்லூரி மாணவி ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

    தனது வீட்டின் கண்ணாடியில் "I QUIT" என்ற வாசகத்தை லிப்ஸ்டிக்கில் எழுதி வைத்துவிட்டு அவர் தற்கொலை செய்திருக்கிறார்.

    ஜான்சியில் உள்ள காதியா படக், இமாம்வாடாவைச் சேர்ந்த அந்தப் பெண், ஏப்ரல் 9 ஆம் தேதி காலை தனது அறையில் இறந்து கிடந்தார்.

    அவரது குடும்பத்தினரின் கூற்றுப்படி, அவர் நான்கு முதல் ஐந்து மாதங்களுக்கு முன்பு சிகிச்சையின் போது சந்தித்த ஆசாத் என்ற பல் மருத்துவருடன் உறவில் இருந்தார். இந்த உறவு திருமண வாக்குறுதியாக வளர்ந்தது. இருப்பினும், ஆசாத் சமீபத்தில் வேறொருவருடன் நிச்சயதார்த்தம் செய்து கொண்டார். இதனால் இருவரிடையேயும் பிரச்சனை வளர்ந்தது.

    பெண்ணின் தாயுடைய கூற்றுப்படி, சம்பவம் நடந்து அன்று காலை அவளை டாக்டரின் குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்தார்கள். அங்கு அவரின் முழு குடும்பமும் ஒரு அறையில் அடைத்து வைத்து அவளைத் தாக்கினர். இதனால் மனமுடைந்த மகள் வீட்டுக்கு வந்து தற்கொலை செய்துகொண்டதாக தெரிவித்தார்.

    மேலும் அந்த டாக்டர் தனது மகளை போன்று பல பெண்களை ஏமாற்றியுள்ளதாக அவர் குற்றம்சாட்டினார். டாக்டரின் நிச்சயதார்த்தமன்று அங்கு சென்று மற்றொரு பெண் தனக்கு நியாயம் கேட்டு பிரச்சனை செய்ததாக தற்கொலை செய்த மாணவியின் தாய் தெரிவித்துள்ளார். இதற்கிடையே பெண்ணின் தற்கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    [தற்கொலை எண்ணங்களிலிருந்து விடுபடுவதற்கான ஆலோசனைகள் பெற தமிழக அரசு நல்வாழ்வுத் துறை ஹெல்ப்லைன் – 104 மற்றும் சினேகா தற்கொலைத் தடுப்பு ஹெல்ப்லைன் – 044-24640050]

    Next Story
    ×