என் மலர்
இந்தியா

I-PAC நிறுவனத்தில் சோதனை: மம்தா பானர்ஜி புகார்- ED மீது வழக்குப் பதிவு செய்த போலீஸ்
- I-PAC நிறுவனம், அதன் இயக்குநர் வீடுகளில் ED சோதனை.
- சோதனை எதிர்த்து போலீசார், சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது மம்தா பானர்ஜி குற்றச்சாட்டு.
மேற்கு வங்கத்தில் மார்ச்- ஏப்ரல் மாதத்தில் சட்டசபை தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில், அமலாக்கத்துறை திடீரென திரணாமுல் காங்கிரஸ் கட்சிக்கு தேர்தல் வியூகம் வகுத்து கொடுக்கும் I-PAC நிறுவனம் மற்றும் அதன் இயக்குனர் வீட்டில் சோதனை நடத்தியது. இதற்கு மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்தார். திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் தேர்தல் தொடர்பான முக்கிய தரவுகளை திருடுவதற்கான சோதனை எனக் கடுமையாக குற்றம்சாட்டியிருந்தார்.
மேலும், அமலாக்கத்துறைக்கு எதிராக மம்தா பானர்ஜி புகார் அளித்திருந்தார். இதனடிப்படையில் போலீஸ் அமலாக்கத்துறைக்கு எதிராக எஃப்.ஐ.ஆர். பதிவு செய்துள்ளது.
மம்தா தனது புகாரில் பெயரிடப்படாத அமலாக்கத்துறை அதிகாரிகள் மற்றும் சிஆர்பிஎஃப் வீரர்கள் மீது புகார் அளித்துள்ளார்.
இதேபோல் கொல்கத்தா உயர்நீதிமன்றத்திலும் திரிணாமுல் காங்கிரஸ் வழக்குத் தொடர்ந்துள்ளது. திரிணாமுல் காங்கிரஸ் கட்சி, அமலாக்கத்துறை நடத்திய சோதனைகளின்போது கைப்பற்றப்பட்ட ஆவணங்களை தவறாகப் பயன்படுத்துவதற்கும் பரப்புவதற்கும் தடை விதிக்கக் கோரி கல்கத்தா உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது.






