search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சல பிரதேசத்தில் இன்று தேர்தல்-  காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது
    X

    (கோப்பு படம்)

    இமாச்சல பிரதேசத்தில் இன்று தேர்தல்- காலை 8 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குகிறது

    • 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.
    • 55 லட்சத்திற்கும் அதிகமானோர் இன்றைய தேர்தலில் வாக்களிக்கின்றனர்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேச சட்டசபைக்கு இன்று ஒரே கட்டமாக தேர்தல் நடைபெறுகிறது. காலை 8 மணிக்கு தொடங்கும் வாக்குப்பதிவு மாலை 5 மணிக்கு நிறைவு பெறுகிறது. மொத்தம் உள்ள 68 தொகுதிகளில் 412 வேட்பாளர்கள் இன்றைய தேர்தல் களத்தில் உள்ளனர்.

    55 லட்சத்து, 74 ஆயிரத்து 793 வாக்காளர்கள் இன்று தமது ஜனநாயக கடமையை ஆற்ற உள்ளனர். தேர்தலையொட்டி 7,884 வாக்கு சாவடிகள் அங்கு அமைக்கப்பட்டுள்ளன. இந்த தேர்தலில் பாஜக, காங்கிரஸ், ஆம்ஆத்மி, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட், பகுஜன் சமாஜ் உள்ளிட்டவை போட்டியிட்டாலும் ஆட்சியை கைப்பற்ற பாஜக, காங்கிரஸ் இடையே போட்டி நிலவுகிறது.

    இமாச்சல பிரதேசத்தை பொறுத்தவரை ஒரு கட்சி தொடர்ந்து 2-வது முறையாக ஆட்சி அமைத்தது இல்லை. ஆட்சியை தக்க வைக்க பாஜகவும், ஆட்சியை மீண்டும் பிடிக்கும் நம்பிக்கையில் காங்கிரசும் உள்ளன. தேர்தலையொட்டி பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. 30 ஆயிரத்திற்கும் அதிகமானோர் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.தேர்தல் நேர்மையாகவும், அமைதியாகவும் நடைபெற அனைத்து ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இன்று பதிவாகும் வாக்குகள் அடுத்த மாதம் 8ந் தேதி எண்ணப்படுகிறது.

    Next Story
    ×