என் மலர்tooltip icon

    இந்தியா

    இமாச்சல் பஸ் விபத்தில் 14 பேர் பலி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி
    X

    இமாச்சல் பஸ் விபத்தில் 14 பேர் பலி: நிவாரணம் அறிவித்தார் பிரதமர் மோடி

    • பஸ் திடீரென சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.
    • இந்த விபத்தில் சம்பவ இடத்திலேயே 14 பேர் பரிதாபமாக பலியானார்கள்.

    சிம்லா:

    இமாச்சல பிரதேசத்தின் சிம்லாவில் இருந்து குப்வி என்ற இடத்திற்கு ராஜ்கார் வழியாக தனியார் பஸ் நேற்று சென்றது.

    இந்த பஸ் சிர்மோர் மாவட்டம், ஹரிபுர்தார் கிராமத்திற்கு அருகே நேற்று வந்து கொண்டிருந்தது. அப்போது அந்த பஸ் திடீரென சாலையை விட்டு விலகி அருகில் உள்ள 500 அடி பள்ளத்தில் கவிழ்ந்து விழுந்தது.

    இந்த விபத்தில் 14 பேர் பலியானார்கள். 30 பேர் படுகாயம் அடைந்தனர்.

    தகவலறிந்து விரைந்து சென்ற மீட்புக் குழுவினர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைகளில் சேர்த்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

    இந்நிலையில், பள்ளத்தில் பஸ் கவிழ்ந்த விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். அத்துடன், விபத்தில் பலியானோர் குடும்பத்தினருக்கு தலா 2 லட்சமும், படுகாயம் அடைந்தோருக்கு 50 ஆயிரமும் நிவாரணம் அறிவித்து உத்தரவிட்டுள்ளார்.

    மாநில முதல் மந்திரி சுக்விந்தர் சிங் சுகுவும் பலியானோர் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×