search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி 6 மாதமாக குறைப்பு - சுகாதாரத்துறை அறிவிப்பு
    X

    கொரோனா தடுப்பூசி

    பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி 6 மாதமாக குறைப்பு - சுகாதாரத்துறை அறிவிப்பு

    • 60 வயதுக்கு மேற்பட்டோர், சுகாதார மற்றும் முன்கள பணியாளர்கள் அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.
    • பூஸ்டர் டோஸ் தடுப்பூசிக்கான கால இடைவெளி 9 மாதத்தில் இருந்து 6 மாதமாக குறைத்தது மத்திய சுகாதாரத் துறை.

    புதுடெல்லி:

    இந்தியாவில் தற்போது 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு கொரோனாவுக்கு எதிரான பூஸ்டர் டோஸ் தடுப்பூசி முன் எச்சரிக்கை டோஸ் தடுப்பூசி என்ற பெயரில் போடப்படுகிறது.

    இந்நிலையில், மத்திய சுகாதாரத் துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது:

    கொரோனா தடுப்பூசி 2வது டோஸ் செலுத்திய பிறகு 9 மாதங்கள் அல்லது 39 வாரங்களுக்கு பிறகு பூஸ்டர் ஊசி செலுத்தப்பட்டு வருகிறது.

    அறிவியல் ஆதாரங்கள் மற்றும் உலக நாடுகளின் அடிப்படையில் இதனை 6 மாதங்கள் அல்லது 26 வாரங்களாகக் குறைக்க வேண்டும் என துணைக்குழு அளித்த பரிந்துரையை நோய் தடுப்புக்கான தேசிய தொழில்நுட்பக் குழு ஏற்றுக்கொண்டுள்ளது.

    எனவே, 2வது டோஸ் தடுப்பூசி செலுத்திக் கொண்ட 18 முதல் 59 வயதுடைய அனைத்துப் பயனாளிகளும் தனியார் தடுப்பூசி மையங்களில் 6 மாதங்களுக்கு பிறகு பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம்.

    60 வயதுக்கு மேற்பட்டவர்கள், சுகாதார பணியாளர்கள், முன்கள பணியாளர்கள், அரசு மருத்துவமனைகளில் இலவசமாக பூஸ்டர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளலாம். இதற்கான மாற்றங்கள் கோ வின் இணைய தளத்தில் செய்யப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

    Next Story
    ×