search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    ஜி20 மாநாடு: டெல்லியில் வெடி பொருட்களுடன் ஆட்டோ செல்வதாக வதந்தி- வாலிபர் கைது
    X

    ஜி20 மாநாடு: டெல்லியில் வெடி பொருட்களுடன் ஆட்டோ செல்வதாக வதந்தி- வாலிபர் கைது

    • வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று செல்வதாக சமூக ஊடகங்களில் ஆட்டோ புகைப்படத்துடன் ஒரு வாலிபர் வதந்தி பரப்பி உள்ளார்.
    • உடனடியாக போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர்.

    புதுடெல்லி:

    ஜி 20 உச்சி மாநாடு டெல்லியில் இன்று தொடங்குகிறது. இதில் பங்கேற்பதற்காக பல்வேறு நாடுகளில் இருந்து தலைவர்கள் டெல்லி வந்துள்ளனர்.

    இதையொட்டி டெல்லியில் பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் உச்சிமாநாடு நடைபெறும் பிரகதி மைதான பகுதிக்கு துப்பாக்கிகள், வெடிபொருட்களை ஏற்றிக்கொண்டு ஆட்டோ ஒன்று செல்வதாக சமூக ஊடகங்களில் ஆட்டோ புகைப்படத்துடன் ஒரு வாலிபர் வதந்தி பரப்பி உள்ளார்.

    இதைத்தொடர்ந்து உடனடியாக போலீசார் சோதனையை தீவிரப்படுத்தினர். இதில் அந்த வாலிபர் வதந்தி பரப்பியது உறுதி செய்யப்பட்டது.

    பின்னர் இதுதொடர்பாக நடத்திய விசாரணையில் டெல்லியின் பால்ஸ்வா டெய்ரி பகுதியை சேர்ந்த 21 வயதான சாஹ் என்பவர் இந்த வதந்தியை பரப்பியது கண்டுபிடிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து போலீசார் அவரை கைது செய்தனர். விசாரணையில் அவருக்கும் அதே பகுதியை சேர்ந்த மற்றொருவருக்கும் ஆட்டோவை நிறுத்துவது தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்ததது தெரிய வந்தது. எனவே அந்த நபரை சிக்க வைப்பதற்காக சாஹ் இவ்வாறு வதந்தி பரப்பியது தெரியவந்தது.

    Next Story
    ×