என் மலர்
இந்தியா

மத்திய அரசு
நினைவுச் சின்னங்கள், சுற்றுலா தலங்களை பார்வையிட இலவச அனுமதி - மத்திய அரசு அறிவிப்பு
- 75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய அரசு பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை செய்துவருகிறது.
- நினைவுச் சின்னம், அருங்காட்சியகங்களை பார்வையிட இலவச அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:
75-வது சுதந்திர தினத்தையொட்டி மத்திய, மாநில அரசுகள் பல்வேறு சிறப்பு ஏற்பாடுகளை மேற்கொண்டு வருகிறது.
இந்நிலையில், நாடு முழுவதும் உள்ள பாதுகாக்கப்பட்ட நினைவு சின்னங்கள், அருங்காட்சியகங்கள், தொல்லியல் தளங்கள் மற்றும் முக்கிய சுற்றுலா தலங்களைப் பார்வையிட இலவச அனுமதி வழங்கப்படும் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
நாட்டின் 75-வது சுதந்திர தினத்தைக் கொண்டாடப்படுவதை முன்னிட்டு ஆகஸ்ட் 5-ம் தேதி முதல் 15-ம் தேதி வரை பார்வையாளர்களுக்கு இலவச அனுமதி அளிக்கப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Next Story






