என் மலர்
இந்தியா

வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மரணம்: பிரதமர் மோடி இரங்கல்
- வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் கலிதா ஜியா ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவு கூரப்படும்.
- 2015-ஆம் ஆண்டு டாக்காவில் அவரை நான் சந்தித்த இனிய சந்திப்பை நினைவுகூர்கிறேன்.
புதுடெல்லி:
வங்காளதேச முன்னாள் பிரதமர் கலிதா ஜியா மறைவுக்கு இந்திய பிரதமர் மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார். இதுதொடர்பாக அவர் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறியதாவது:-
வங்காளதேச முன்னாள் பிரதமரும், வங்காளதேச தேசியவாத கட்சியின் தலைவருமான கலிதா ஜியா மரணம் அடைந்த செய்தியறிந்து ஆழ்ந்த வருத்தம டைந்தேன். அவரது குடும்பத்தினருக்கும், வங்காளதேச மக்கள் அனைவருக்கும் எங்களின் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இந்தத் துயர இழப்பைத் தாங்கிக்கொள்ள அவரது குடும்பத்தினருக்கு எல்லாம் வல்ல இறைவன் மன வலிமையை வழங்க பிரார்த்திக்கிறேன். வங்காளதேசத்தின் முதல் பெண் பிரதமராக, வங்காளதேசத்தின் வளர்ச்சிக்கும், இந்தியா-வங்கதேச உறவுகளுக்கும் கலிதா ஜியா ஆற்றிய முக்கியப் பங்களிப்புகள் எப்போதும் நினைவு கூரப்படும்.
2015-ஆம் ஆண்டு டாக்காவில் அவரை நான் சந்தித்த இனிய சந்திப்பை நினைவுகூர்கிறேன். அவரது தொலைநோக்குப் பார்வையும், மரபும் நமது கூட்டாண்மைக்குத் தொடர்ந்து வழிகாட்டும் என்று நம்புகிறோம். அவரது ஆன்மா சாந்தியடையட்டும்.
இவ்வாறு மோடி தெரிவித்து உள்ளார்.






