என் மலர்
இந்தியா

National Herald விவகாரத்தில் "போலி குற்றப்பத்திரிகை" - இன்று காங்கிரஸ் நாடு தழுவிய போராட்டம்
- அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
- இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
காங்கிரஸ் கட்சியுடன் தொடர்புடைய யங் இந்தியா நிறுவனத்திற்குச் சொந்தமான நேஷனல் ஹெரால்டு பத்திரிகைக்கு எதிரான பண மோசடி வழக்கில் ரூ.751.9 கோடி மதிப்பிலான சொத்துக்களை அமலாக்கத்துறை முடக்கியது.
காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி, ராகுல் காந்தி ஆகிய இருவரும் யங் இந்தியா நிறுவனத்தின் இயக்குனர் குழுவில் இடம் பெற்றிருந்ததுடன், அந்த நிறுவனத்தில் தலா 38 சதவீத பங்குகளை வைத்திருந்தனர்.
2012-ம் ஆண்டு ஏ.ஜே.எல். நிறுவனம் யங் இந்தியா நிறுவனத்தை வாங்கியது. இதில் முறைகேடு நடந்ததாக பாஜக மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி வழக்கு தொடர்ந்தார்.
இதைத்தொடர்ந்து இந்த விவகாரத்தில் அமலாக்கத்துறை வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
இதற்கிடையே நேஷனல் ஹெரால்டு வழக்கு தொடர்பாகக் காங்கிரஸ் தலைவர்கள் சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது அமலாக்கத்துறை நேற்று குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தனர்.
இந்நிலையில் இதை கண்டித்து இன்று நாடு முழுவதும் காங்கிரஸ் போராட்டம் அறிவித்தது. இதுதொடர்பாக பேசிய அக்கட்சித் தலைவர் உத்தித் ராஜ், "பொதுமக்களை விட யாரும் பெரியவர்கள் அல்ல என்பதால் நாங்கள் பொதுமக்களிடம் செல்ல விரும்புகிறோம்.
சோனியா காந்தி மற்றும் ராகுல் காந்தி மீது போலியான குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஆதாரமற்றது மற்றும் சட்டவிரோதமானது என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்" என்று தெரிவித்தார்.






