search icon
என் மலர்tooltip icon

    இந்தியா

    பெண்கள் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது - முன்னாள் மந்திரியின் சர்ச்சை பேச்சு
    X

    பிரியங்க் கார்கே

    பெண்கள் படுக்கையை பகிர்ந்தால் மட்டுமே அரசு வேலை கிடைக்கிறது - முன்னாள் மந்திரியின் சர்ச்சை பேச்சு

    • காங்கிரசை சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் காா்கே செய்தியாளர்களை சந்தித்தார்.
    • கர்நாடகாவில் தற்போதைய ஆட்சியில் அரசுப்பணி வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்றார்.

    பெங்களூரு:

    காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த முன்னாள் மந்திரி பிரியங்க் கார்கே கல்புர்கியில் செய்தியாளர்களைச் சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    கர்நாடகத்தில் தற்போதைய பா.ஜ.க. ஆட்சியில் அரசு பணி வேண்டும் என்றால் லஞ்சம் கொடுக்க வேண்டும். அத்துடன் பெண்கள் என்றால் அவர்கள் படுக்கையைப் பகிர்ந்து கொள்ள வேண்டும். அப்போது தான் அவர்களுக்கு அரசு வேலை கிடைக்கிறது.

    மந்திரியாக இருந்த ஈசுவரப்பா 40 சதவீத கமிஷனை கேட்டதால் ஒப்பந்ததாரர் சந்தோஷ் பாட்டீல் தற்கொலை செய்துகொண்டார். இந்த அரசு லஞ்ச-படுக்கை அரசாக மாறிவிட்டது.

    ஆண்டுக்கு 2 கோடி வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாக பிரதமர் மோடி வாக்குறுதி கொடுத்தார். ஆனால் அவர் தனது வாக்குறுதியை நிறைவேற்றவில்லை என தெரிவித்தார்.

    பிரியங்க் கார்கேவின் இந்த சர்ச்சை கருத்துக்கு பா.ஜ.க. தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

    Next Story
    ×