என் மலர்tooltip icon

    இந்தியா

    கேரளா: ஊழியர்களை சங்கிலியால் கட்டி, நாய் போல நடக்கவைத்து கொடுமைப்படுத்திய நிறுவனம்
    X

    கேரளா: ஊழியர்களை சங்கிலியால் கட்டி, நாய் போல நடக்கவைத்து கொடுமைப்படுத்திய நிறுவனம்

    • டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டுள்ளது.
    • இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    கேரளா மாநிலம் கொச்சியில் உள்ள ஒரு தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களை சங்கிலியால் கட்டிவைத்து நாய்களைப் போல மண்டியிட்டு நடக்கவும், தரையில் இருந்து நாணயங்களை நக்கவும் வைத்து கொடுமைப்படுத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    தனியார் மார்க்கெட்டிங் நிறுவனத்தில் டார்கெட் முடிக்காத ஊழியர்களுக்கு இத்தகைய கொடூர தண்டனை கொடுக்கப்பட்டதாக அந்நிறுவனத்தில் வேலை பார்த்த ஊழியர்கள் தெரிவித்தனர்.

    இது தொடர்பான வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில தொழிலாளர் துறை உத்தரவிட்டுள்ளது.

    இந்த விவகாரம் தொடர்பாக இதுவரை எந்த புகாரும் வரவில்லை, ஆனால் இது தொடர்பாக , விசாரணை நடத்தப்பட்டு வருகிறது என்று போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

    Next Story
    ×