என் மலர்tooltip icon

    இந்தியா

    நடத்தையில் சந்தேகம்..  கற்பை சோதிக்க கொதிக்கும் எண்ணெய்யில் கை வைக்க கூறி கணவன் வீட்டார் சித்ரவதை
    X

    நடத்தையில் சந்தேகம்.. கற்பை சோதிக்க கொதிக்கும் எண்ணெய்யில் கை வைக்க கூறி கணவன் வீட்டார் சித்ரவதை

    • மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள்.
    • நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக மிரட்டினார்கள்.

    குஜராத்தில் நடத்தியில் சந்தேகப்பட்டு கணவன் வீட்டாரால் பெண் ஒருவர் கொடூரமான சித்ரவதைக்கு ஆளான சம்பவம் வெளிச்சத்துக்கு வந்துள்ளது.

    மெஹ்சானா மாவட்டத்தில் விஜப்பூர் பகுதியில் உள்ள கெரிடா கிராமத்தில் கணவன் மற்றும் 2 குழந்தைகளுடன் பாதிக்கப்பட்ட 28 வயதான பெண் வசித்து வந்தார்.

    விவசாயத் தொழிலாளியாக வேலை செய்து வந்த அவர் தனக்கு நேர்ந்த கொடுமை குறித்து போலீசில் புகார் அளித்துள்ளார்.

    அந்த புகாரில், தனது மைத்துனி தனது நடத்தையில் சந்தேகித்து, தொடர்ந்து தன்னை இழிவாகப் பேசி துன்புறுத்தியதாக தெரிவித்துள்ளார்.

    மேலும், கடந்த 16 ஆம் தேதி, "மைத்துனியும் அவரது சகோதரர்களும் இணைந்து, தனது கற்பை பரிசோதிக்க தனது கையை பாத்திரத்தில் கொதிக்கும் எண்ணெய்யில் வைக்க கட்டப்படுத்தினர். நான் மறுத்ததால் என்னை அடித்து, எனது கை கொதிக்கும் எண்ணெயில் படும்படி அடுப்பை நோக்கித் தள்ளினார்கள்.

    தனது அலறல் கேட்டும் சித்திரவதையை நிறுத்தாமல், மைத்துனி சூடான பாத்திரத்தை எடுத்து எனது வலது காலில் கொதிக்கும் எண்ணெயை ஊற்றினாள். நான் கத்தினால், என்னைக் கொன்றுவிடுவதாக அவள் மிரட்டினாள்" என்று தெரிவித்துள்ளார்.

    அவரது அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் வீட்டிற்கு விரைந்து சென்று, அவரை ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு அவருக்குச் சிகிச்சை அளிக்கப்பட்டது.

    பெண்ணின் புகாரை அடுத்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    Next Story
    ×